மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: சட்டென நாட்டு நடப்பு.. டக்கென தேசிய செய்திகள்.. உங்களுக்காக காலை 7 மணி தலைப்பு செய்திகள்..!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைகள் இந்திய மக்களாட்சியின் பிரச்சனை : திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேச உரை
- மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம் - மாணவர்கள் கருத்து
- தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை வெளியாகிறது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்
- தூண்டில் வளைவு திட்டத்துக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தின் தடையை நீக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? மத்திய, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
- வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு : எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
- தங்களது பணியாளர்களுக்கு தானே சம்பளம் கொடுக்கும் அளவிற்கு தன்னிறைவு பெற்ற மாநகராட்சிகளாக, பேரூராட்சிகளாக, நகராட்சிகளாக செயல்பட்ட துவங்கி உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்.
- இபிஎஸ்- திமுக இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதால் கோடநாடு வழக்கு காலம் தாழ்த்தப்படுவதாக மக்கள் கூறுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
- தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும், மியான்மர் நாட்டின் யங்கூன்-சென்னை-யங்கூன் இடையே, புதிதாக வாராந்திர நேரடி விமான சேவை நேற்று முதல் தொடங்கியது.
இந்தியா:
- கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்றுடன் நிறைவி - நாளை மறுநாள் வாக்குபதிவு
- தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை: குஜராத்தில் 5 ஆண்டில் 40,000 பெண்கள் மாயம் - பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்
- அடுத்த ஆண்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் குடியரசு தின அணிவகுப்பு : மத்திய அரசு திட்டம்
- 40 சதவீத கமிஷனில் டபுள் இஞ்சின் அரசுக்கு தலா எவ்வளவு கிடைத்தது..? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
- கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து நேர்ந்த கோர விபத்தில் பலியானவரகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
- அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஒடிசாவில் மாணவர்கள், பேராசிரியர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் திரௌபதி முர்மு உரையாற்றி கொண்டிருந்தபோது, அங்கு திடீரென மின்தடை ஏற்பட்டது.
- இந்திய கடற்படையின் மிகப் பழமையான கப்பலான ஐஎன்எஸ் மகர், 36 ஆண்டுகள் தேசத்திற்கு சேவை செய்த பின்னர் சனிக்கிழமை பணியிலிருந்து ஓய்வு பெற்றது.
உலகம்:
- அமெரிக்காவில் பிரபல வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- காங்கோவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 203 பேர் உயிரிழந்தனர்.
- திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
- ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி, 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- பெங்களூரு அணியின் கேப்டனாக தோனி இருந்து இருந்தால் இந்நேரம் அந்த அணி மூன்று கோப்பைகளை வென்று இருக்கும் என பாகிஸ்தன் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
- ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion