மேலும் அறிய
Advertisement
Today Headlines: இதுவரை உங்களை சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்பு செய்திகளாக இதோ..!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- நாட்டின் 77வது சுதந்திர தினவிழா கோலாகல கொண்டாட்டம் - சென்னை கோட்டை கொத்தளத்தில் 3வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- நீட் தேர்வை முற்றிலுமாக அகற்ற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழக விவசாயிகளின் உரிமைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டு கொடுத்து நாடகமாடி வருகிறார் - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- சுதந்திர தின விழாவையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து - அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
- சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 91 நிறுவனங்கள் மீது வழக்கு - தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை
- அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய்க்கடி மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்கிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
- காவிரியில் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
- வைகை எக்ஸ்பிரஸின் 46வது பிறந்த நாளை கொண்டாடிய பயணிகள் - கேக் வெட்டியும், ரயில் ஓட்டுனர்களுக்கு மரியாதை செய்தும் கொண்டாட்டம்
- மாமல்லபுரத்தில் 4 நாட்கள் நடந்த சர்வதேச பட்டம் திருவிழா நிறைவு
- 77 வது சுதந்திர தின நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டம்
இந்தியா:
- 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் - டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார்
- சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவையே எனது தாரக மந்திரம் - பிரதமர் மோடி சுதந்திர தின உரை
- நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்ட வங்கி கடன் சலுகை வழங்கப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
- பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகள் நிறைந்த தேர்தல் பேச்சு - காங்கிரஸ் கட்சி விமர்சனம்
- சத்தீஸ்கரில் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை தரப்படும் - பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை கிடையாது என முதலமைச்சர் பூபேஷ் பாகெல் அறிவிப்பு
- மணிப்பூரில் கலவரத்தால் நிவாரண முகாம்களில் தங்கி உள்ள 3 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைக்கும் பணி தீவிரம்
- காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டிய சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் - ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
- உச்ச நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக 27 நீதிமன்றங்களும் 51 நீதிபதிகளுக்கு அறைகளும் கட்டப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு
உலகம்:
- 2030 ஆம் ஆண்டுக்குள் புகைப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க இங்கிலாந்து அரசு உறுதி
- தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் உள்பட 19 பேருக்கு கைது வாரண்டு பிறப்பிப்பு
- ரஷ்யாவில் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
- எத்தியோப்பியாவில் ராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் - வான்வழி தாக்குதலில் 26 பேர் பலி
- வடகொரியாவில் நவீன ஆயுதங்களின் பயன்பாடுகளை அதிகரிக்க கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்
விளையாட்டு:
- இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
- இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபிப் உடல்நலக்குறைவால் மரணம்
- உலகக்கோப்பை போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்
- பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் ஆசிய விளையாட்டில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விலகல்
- அயர்லாந்து அணியுடனான டி20 தொடர் - வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து பயணம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion