மேலும் அறிய

Miss India 2023 : மிஸ் இந்தியா பட்டத்தை தட்டித் தூக்கிய நந்தினி குப்தா...! யார் இந்த பேரழகி...?

2023 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Miss India 2023 : 2023 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மிஸ் இந்தியா 2023

ஆண்டுதோறும் ஃபெமினா இதழ் சார்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு 71வது மிஸ் இந்தியா போட்டிக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் இருந்து 30 பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மணிப்பூர் மாநிலம் இம்பாலின் உள்ள மைதானத்தில்  நேற்று இதன் இறுதிப்போட்டி நடைபெற்றது. 

இதில்  2023-ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா (19) தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் இரண்டாவது இடத்தை டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா, மூன்றாவது இடத்தை மணிப்பூரைச் சேர்ந்த தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் பெற்றுள்ளனர். 

யார் இந்த நந்தினி குப்தா?

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி  குப்தா (19). லாலா லாஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வருகிறார். 10 வயதில் இருந்தே மாடலிங் துறையில் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்ட இவர், தற்போது மிஸ் இந்தியா 2023 பட்டத்தை வென்றுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Femina Miss India (@missindiaorg)

இதுபற்றி மிஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”உலகமே அவள் வருகிறாள்...வசீகரத்தாலும், தனது அழகுனாலும் அனைவரின் நெஞ்சங்களை வென்றார். அவரை உலக அழகி பட்டத்திற்கான மேடையில் பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்களின் கடின உழைப்புக்கு கிடைந்த அங்கீகாரம் தான் மிஸ் இந்தியா 2023 பட்டம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள உலக அழகிக்கான போட்டியில் நந்தினி குப்தா, இந்தியா சார்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்ரேயா பூஞ்சா

இவரை தொடர்ந்து, இரண்டாவது இடத்தை டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா (22) பெற்றார். டெல்லியில் பட்டப்படிப்பை முடித்த இவர் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளார். தனது 19 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தார். 2019ஆம் ஆண்டில் தேசிய அளவில் நடந்த மாடலிக் போட்டியில் பங்கேற்று தன்னுடைய முதல் வெற்றியை பதித்தார்.

மேலும், புகழ்பெற்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான மணீஷ் மல்ஹோத்ரா, ராகவேந்திர ரத்தோர் மற்றும் நீதா லுல்லா ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். பிரியங்கா சோப்ராவின் தீவிர ரசிகை  இவர். இந்நிலையில், நேற்று நடந்த மிஸ் இந்தியா 2023ல் இரண்டாம் இடத்தை பெற்றார். 

மேலும் படிக்க

Atiq Ahmad: போலீசார் முன்பே முன்னாள் எம்.பி. சுட்டுக்கொலை..! உச்சபட்ச பதற்றத்தில் உத்தரப்பிரதேசம்..!144 தடை அமல்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Embed widget