MiG-21 Fighter Jet Crash: மிக் 21 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து... 2 விமானிகள் பலி!
2021ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் ஐந்து MiG-21 ரக விமானங்கள் இந்தியாவில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், தற்போது இந்த விமானம் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் ராஜஸ்தான் மாவட்டம், பர்மர் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், விமானத்தை இயக்கிய 2 விமானிகள் உயிரிழந்தனர்
இரவு சுமார் 9 மணியளவில் போர் விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில், விமானம் முழுவதும் எரிந்து நாசமானது.
Rajasthan | A MiG-21 fighter aircraft of the Indian Air Force crashed near Barmer district. Further details awaited pic.twitter.com/egJweDNL4a
— ANI (@ANI) July 28, 2022
இந்நிலையில் விமான விபத்து குறித்து பேசிய பார்மர் மாவட்ட ஆட்சியர் லோக் பாண்டு, பேட்டூ தாலுகாவில் உள்ள பிம்டா கிராமம் அருகே இந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளார்.
#WATCH | Rajasthan: A MiG-21 fighter aircraft of the Indian Air Force crashed near Barmer district. Further details regarding the pilots awaited pic.twitter.com/5KfO24hZB6
— ANI (@ANI) July 28, 2022
இந்த விமான விபத்து குறித்து முன்னதாக விமானப்படைத் தளபதியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
முன்னதாக இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய விமானப்படையின் விமானி விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.
2021ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் ஐந்து MiG-21 ரக விமானங்கள் இந்தியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்துகளில் மூன்று விமானிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தம்பி மாஸ்காட்டை தேர்ந்தெடுத்தது ஏன்? : விளக்கமளித்த முதலமைச்சர் ஸ்டாலின்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்