Modi wishes Manmohan Singh: மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி
மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் தொடர்ந்து தெரிவிப்போம் - காங்கிரஸ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
I pray for the good health and speedy recovery of Dr. Manmohan Singh Ji.
— Narendra Modi (@narendramodi) October 14, 2021
நம்முடைய முன்னாள் பாரத பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் அவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறோம்.#GetWellSoonDrMMS pic.twitter.com/6ndc3AhhAK
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) October 13, 2021
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டாக்டர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
There are some unsubstantiated rumours with regards to former PM, Dr Manmohan Singh ji’s health. His condition is stable.
— pranav jha (@pranavINC) October 13, 2021
He is undergoing routine treatment. We will share any updates as needed. We thank our friends in media for their concern.
மன்மோகன் சிங் தொடர்பாக பரவிய வதந்தி குறித்து காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயலர் பிரனாவ் ஜா தனது ட்விட்டர் பதிவில்,"முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் தொடர்ந்து தெரிவிப்போம்," என்று தெரிவித்தார்.
Health Minister @mansukhmandviya visits AIIMS to enquire about health of Dr. Manmohan Singh. Health Minister wished him a speedy recovery. pic.twitter.com/vkWfd2Yy3E
— All India Radio News (@airnewsalerts) October 14, 2021
இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேரில் சென்று நலம் விசாரித்தார்.
மன்மோகன் சிங்: 1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்
2004-இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அப்பதவியில் இருந்து சிறப்பாக செயல்புரிந்தார்.சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார். மன்மோகன் சிங்கின் வயது 89 ஆகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்