(Source: ECI/ABP News/ABP Majha)
ஆம்புலன்ஸ் வழங்கப்படாததால் மகளின் சடலத்தை பைக்கில் எடுத்து சென்ற தந்தை.. வீடியோ வைரல்...
மத்திய பிரதேத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததால், மகளின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் சுமந்து சென்ற தந்தை. ஆட்சியர் உத்தரவின் பேரில் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் ஷாஹ்டோலில் புதர் பிளாக்கின் கோட்டா கிராமத்தில் வசிக்கும் லஷ்மன் சிங் கவுட் தனது 13 வயது மகள் மாதுரியை மே 12-ஆம் தேதியன்று ஷாஹோல் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். sickle cell என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த மாதுரிக்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் மாதுரியின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளனர். 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே ஆம்புலன்ஸ் வழங்க முடியும் என்றும், 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்க முடியாது என்றும் கூறி ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாதுரியின் தந்தை லஷ்மண் சிங் கவுட் கூறுகையில் 15 கிலோ மீட்டருக்கு மேல் ஆம்புலன்ஸ் வழங்க முடியாது என கூறி மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்து விட்டதாக தெரிவித்தார். மேலும் அவர்கள் தங்களை வாகனம் ஏற்பாடு செய்ய கூறிய நிலையில், தங்களிடம் பணம் இல்லாததால் மகளின் உடலை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்றதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் வந்தனா வைத்யா, லஷ்மண் சிங் கவுட்டிடம் இது குறித்து விசாரித்துள்ளார். மேலும் அந்த உடலை சுமந்து செல்ல உடனடியாக வாகனம் வழங்க ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், பாதிவழியில் சென்ற மருத்துவர் அவர்களுக்கு சடத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வழங்கி அவர்களை கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும் அக்குடும்பத்தினருக்கு ஆட்சியர் நிதியுதவி வழங்கினார்.
MP | Shahdol
— काश/if Kakvi (@KashifKakvi) May 16, 2023
लक्षमण सिंह गोंड (आदिवासी) की 13 साल की बेटी माधुरी की सिकल सेल बीमारी से मौत हो गई।
एंबुलेंस मांगने पर अस्पताल में कहा: अनुमति 15 किमी तक की है 70 किमी के लिए अपना इंतज़ाम करो।
प्राइवेट एंबुलेंस बजट में नहीं था तो लक्षमण बेटी का शव बाइक पर लेकर चल पड़े।
1/2 pic.twitter.com/aFDBp4DgLu