மேலும் அறிய

Crime : அதிரவைத்த கொடூரம்.. மனைவிகளை மாற்றிக்கொள்ள பார்ட்டி.. வற்புறுத்திய கணவர்.. என்ன நடந்தது?

பல நாட்களாக இந்த சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த நான் குருகிராமில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகாரளிக்க முயன்றேன்.

உத்தரப்பிரதேசத்தில் மனைவியை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாக கணவர் மீது பெண் புகாரளித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் முசாபர்நகரில் உள்ள கூடுதல் தலைமை  குற்றவியல் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், குருகிராமில் வசிப்பவரும், தொழிலதிபருமான தனது கணவர் என்னை மிரட்டி டெல்லியில் நடக்கும் விருந்துகளுக்கு  வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதாகவும், தனது சொந்த சகோதரனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி உத்தரபிரதேச போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினர். 

இதில் அந்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு இருவரும்  குருகிராமுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அந்த நபர் இப்பெண்ணுக்கு 2வது கணவர் ஆவார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண் திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் பலவற்றை முன்வைத்தார். 

அதாவது மனைவியை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு நான் செல்ல மறுத்தால் என் கணவர் என்னைத் தாக்குவதோடு மட்டுமல்லாமல் பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் செய்வார். பல நாட்களாக இந்த சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த நான் குருகிராமில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகாரளிக்க முயன்றேன். ஆனால் என் கணவரின் அடியாட்கள் என்னை வழிமறித்தனர். இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினர் என தெரிவித்துள்ளார். 

இதனடிப்படையில் முதற்கட்டமாக  அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரர் மீது சட்டப்பிரிவு 376 (கற்பழிப்பு), 307 (கொலை முயற்சி), 323 (தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என நியூ-மண்டி காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் பிரிவு 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை) ஆகியவை கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குருகிராமில் நடந்ததால் விரைவில் வழக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் மனைவியை மாற்றிக் கொள்ளும் நிகழ்வுகள் சகஜமாக நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் சென்னை, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்நிகழ்வுகள் நடந்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget