MS Dhoni's Ranchi farm : தோனியின் பண்ணைக்குச் சென்ற 2000 கருங்கோழிகள்!! கோழி வளர்ப்பில் அடுத்த திட்டம்!!
கடக்நாத் கோழியின் முட்டை மற்றும் இறைச்சி மற்ற கோழி இனங்களை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தகவலின் பேரில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கூட்டுறவு நிறுவனம் ஒன்று ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள பண்ணைக்கு புரதச் சத்து நிறைந்த 'கடக்நாத்' இனத்தைச் சேர்ந்த 2,000 கருங்கோழிக்குஞ்சுகளை அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் ஜபுவா மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு கடக்நாத் கோழி இறைச்சி, சத்தீஸ்கர் மாநிலத்துடனான சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 2018 இல் புவியியல் குறியீட்டை (ஜிஐ) பெற்றது. இதன் காரணமாக இந்த வகை கோழியின் வணிக மதிப்பு அடிக்கடி உயர்கிறது என்று தகவல் தெரிவிக்கின்றன.
இந்த கடக்நாத் கோழியின் முட்டை மற்றும் இறைச்சி மற்ற கோழி இனங்களை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
உள்ளூர் கூட்டுறவு நிறுவனத்தில் இருந்து தோனி, ஆர்டர் செய்த 2,000 'கடக்நாத்' கோழி குஞ்சுகளை தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு வாகனத்தில் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டதாக ஜாபுவா கலெக்டர் சோமேஷ் மிஸ்ரா பிடிஐயிடம் தெரிவித்தார்.
"தோனி போன்ற பிரபலமான ஆட்கள் கடக்நாத் கோழி வகைகளில் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்த குஞ்சுகளை யார் வேண்டுமானாலும் ஆன்லைன் முறையில் ஆர்டர் செய்யலாம், இது மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு (இந்த கோழியை வளர்ப்பது) பயனளிக்கும்" என்று மிஸ்ரா கூறினார்.
Former India captain Mahendra Singh Dhoni has postponed his plans to order new consignment of Kadaknath and Gramapriya chicken due to the bird flu scare.#msdhoni #business #BirdFlu #kadaknathhttps://t.co/AjkA5FfFQd
— Udayam (@udayamtelugu) January 14, 2021
ஜாபுவாவின் க்ரிஷி விக்யான் கேந்திரா தலைவர் டாக்டர் ஐ எஸ் தோமர் கூறுகையில், தோனி சில காலத்திற்கு முன்பு ஆர்டர் செய்தார். ஆனால் பறவைக் காய்ச்சல் வெடித்ததால் அந்த நேரத்தில் கோழி குஞ்சுகளை வழங்க முடியவில்லை.
ஜபுவாவின் ருண்டிபாடா கிராமத்தில் கடக்நாத் தயாரிப்புடன் தொடர்புடைய கூட்டுறவு அமைப்பை நடத்தி வரும் வினோத் மேதாவிடம் தோனி ஆர்டர் செய்துள்ளார். ராஞ்சிக்கு அனுப்பப்பட்ட 2,000 கடக்நாத் கோழி குஞ்சுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரரின் பண்ணை வீட்டில் குஞ்சுகளை வளர்க்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளதால், கோழி குஞ்சுகளை உடனே அனுப்புமாறு தோனியின் மேலாளர் தன்னிடம் கூறியதாக மேதா பிடிஐயிடம் தெரிவித்தார்.
ஜாபுவாவின் பழங்குடி கலாச்சாரத்தின் அடையாளமாக தோனிக்கு ஒரு பாரம்பரிய வில் மற்றும் அம்புகளை பரிசளிப்பதாகவும் மேதா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச அரசாங்கம் கடந்த 2018 இல் கடக்நாத் செயலியை அறிமுகப்படுத்தியது, இதனால் மக்கள் ஆன்லைன் முறையில் குஞ்சுகளை ஆர்டர் செய்யலாம் என்றும், ஒரு நாள் வயதுடைய கடக்நாத் குஞ்சுகள் கிட்டத்தட்ட ரூ. 75 ஆகும், அதே சமயம் 15 நாள் மற்றும் 28 நாள் வயதுடைய குஞ்சுகள் முறையே ரூ.90 மற்றும் ரூ.120 ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்