Maan Ki Baat: 100வது மன் கி பாத்; ஐ.நா. சபையில் நேரடி ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி - மிகுந்த எதிர்பார்ப்பு
பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
Maan Ki Baat : பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலையகத்தில் நேரடி ஒலிபரப்பப்பட உள்ளது.
மன் கி பாத்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக அக்டோபர் 3-ஆம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி தொடக்கப்பட்டது. இதன் பின், அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணி முதல் 11.30 மணி மணி வரை மன் கி பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஹிந்தியில் உரையாற்றி வருகிறார் மோடி.
இந்த மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் தமது கருத்துகளை பகிர்ந்து கொள்வார் பிரதமர் மோடி. குறிப்பாக தமிழர் பெருமை, தமிழ் மொழி பற்றி அவ்வப்போது குறிப்பிட்டு பேசுவார். பிரதமர் மோடி உரையாடுவது பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சூழலில் மன் கி பாத் 100-வது பகுதி இன்று ஒலிபரப்பாகிறது. இதனை 63 மொழிகளில் மொழி பெயர்த்து ஒலிபரப்பு செய்ய அகில இந்திய வானொலி திட்டமிட்டுள்ளது.
ஐ.நா தலையகத்தில் ஒலிபரப்பு
மேலும், பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழச்சியை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்து, இது குறித்து ஐக்கிய நாடுகளுக்கான இந்திய தூதரின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ” பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று (ஏப்ரல் 30) காலை 11.00 மணிக்கு ஒலிபரப்பப்படும். இது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திலும் நேரடி ஒலிபரப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.
Get ready for a historic moment 🎉 as the 100th episode of PM Modi's "Mann Ki Baat"🎙️ is set to go live on April 30th in Trusteeship Council Chamber at @UN HQ!
— India at UN, NY (@IndiaUNNewYork) April 28, 2023
📻 #MannKiBaat has become a monthly national tradition, inspiring millions to participate in 🇮🇳’s developmental journey pic.twitter.com/6ji4t1flmu
மேலும், மன் கி பாத் நிகழ்ச்சி ஒரு தேசிய பாரம்பரியமாக மாறியுள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல பிரதமேர் மோடியின் உரை ஊக்குவிக்கிறது. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இது இருக்கும்” என்று ஐக்கிய நாடுகளுக்கான இந்திய தூதர் குழு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்கு ஒலிப்பரப்பாகும். மேலும், அமெரிக்காவின் நேரப்படி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணிக்கு இந்த உரை ஒலிபரப்பாகும்.
பிரதமருக்கு வாழ்த்து
பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் பணக்காரரான பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "மன் கி பாத் நிகழ்ச்சியானது சுகாதாரம், மகளிரின் பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல், வளர்ச்சிக்கான விஷயங்கள், சமூகத்தினர் தலைமையிலான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஊக்குவித்து வருகிறது. 100வது மன் கி பாத் நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.