Election Commission: தலைமை தேர்தல் ஆணையருக்கு உத்தரவு: லட்சுமண ரேகையை மீறிய மத்திய அரசு!
பொதுவாக, தேர்தல் சீர்திருத்தம் வேண்டி சட்டத்துறை அதிகாரிகளுடன், அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனையை மேற்கொள்ளும்
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை கலந்து கொள்ளும்படி பிரதமர் அலுவலகம் உத்தரவிட்ட நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை லட்சுமண ரேகையைக் கடைபிடிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முற்றிலும் புறக்கணித்துவிட்டதாக ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், கூட்டத்திற்குப் பிறகு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் முறைசாரா விதத்தில் கலந்துரையாடியதாகவும் (informal talks) தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி, மத்திய சட்டத்துறை அமைச்சக செயலாளர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் அனைத்துக்கும் பொது வாக்காளர் பட்டியல் குறித்து பிரதமரின் தலைமைச் செயலர், டாக்டர் பி.கே மிஸ்ரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், தலைமை தேர்தல் ஆணையர் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சுதந்திரமான தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் எல்லாவிதமான அரசியல் குறுக்கீடுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டவர்களாக, சுதந்திரமாக இருக்க வேண்டியது கட்டாயாமாகும். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அலுவல் சார்ந்த வசதிகளை மட்டும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் செய்து கொடுக்கிறது.
பொதுவாக, தேர்தல் சீர்திருத்தம் வேண்டி சட்டத்துறை அதிகாரிகளுடன், அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனையை மேற்கொள்ளும். மேலும், தேர்தல் நடத்துவதற்குத் தேவையான அலுவல் சார்ந்த வசதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தொடர்புடைய அமைச்சக அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கும்.
நாட்டில் நியாயமான, நேர்மையான தேர்தல் நடைபெறுவதை உறுதிபடுத்திட அரசியலமைப்பால் நேரிடியாக உருவாக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம், ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
பொது வாக்காளர் பட்டியல்:
ஒரேயடியாக ஒரு நாடு ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டை மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரமாக கொண்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக, நாடு முழுவதும் ஒரே வாக்காளர் பட்டியல் உருவாக்க வேண்டும்.நாட்டில், தற்போது 29 மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்கிறது. இதர மாநிலங்களில் அந்தந்த தேர்தல்களுக்கு தகுந்தவாறு வாக்காளர் பட்டியல்கள் இருக்கின்றன. பெருமளவிலான பணம், நாட்டு மக்களின் கடுமையான உழைப்பு ஆகியவை அதில் அடங்கி இருக்கின்றன என்றும் தெரிவித்தது.
கட்டாயம் வாசிக்க:
Raising Marriage Age | புதிய திருமண வயது 21: பெண்களுக்கு வரமா, சாபமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்