Watch Video : லைவ் வீடியோவில் தென்கொரிய யூடியூபரிடம் அத்துமீறிய இந்திய இளைஞர்...ஷாக் வீடியோ...!
ராஜஸ்தானில் தென்கொரிய யூடியூபருக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஜோத்பூரைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Watch Video : ராஜஸ்தானில் தென்கொரிய யூடியூபருக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஜோத்பூரைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபோன்று நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த சில நாட்களுக்கு முன் தென்கொரியாவை சேர்ந்த யூடியூபரான ஹியோஜியோங் பார்க், இந்தியா வந்துள்ளார். அப்போது மும்பையின் கார் பகுதியில் பரபரப்பான சாலையில் நடந்து சென்றவாறே லைவ் ஸ்டிரீமிங் செய்துள்ளார்.
அப்போது அவ்வழியாக இரண்டு நபர்கள் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, தற்போது ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
பாலியல் தொந்தரவு
தென்கொரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்குள்ள கலாச்சாரம், பண்பாடு தொடர்பான வீடியோக்களை, தனது சேனலில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்தியா வந்துள்ள அந்த பெண், ராஜஸ்தானில் தங்கியிருந்து பல்வேறு, சுற்றுலா தளங்களை பார்த்து ரசித்து வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பசேட்டியா ஹில் பகுதியில் நடந்து சென்றவாறே, வீடியோ எடுத்துள்ளார். ராஜஸ்தான் மக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை தனது ஃபாலோவர்ஸ்களுக்கு, விளக்கியவாறு அவர் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அந்த இடத்தில் இருந்த ஒரு நபர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்தரங்க உறுப்பை காட்டி முகம் சூளிக்கும் அளவுக்கு அந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளார். இதனால் பதறிப்போன அந்த பெண் அந்த இடத்தில் இருந்து தப்பியோடினார். இதனை அனைத்தையும் வீடியோகவாக பதிவு செய்த அந்த பெண் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றினார்.
கைது
இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர், தென்கொரியா நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஜோத்பூரைச் சேர்ந்த 25 வயதான தீபக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Just came across this video of a Korean vlogger who posted a video of her being sexually harassed in Jodhpur. This is extremely disgusting and shameful. People like these are spoiling the image of our great country. Am writing to Shri @AshokGehlot51 to take strongest action! pic.twitter.com/8vfjblcizx
— Swati Maliwal (@SwatiJaiHind) April 18, 2023
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் பதிலளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”தென்கொரியா நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று நடத்துக் கொண்டது அருவருப்பாக உள்ளது. இதற்கு ராஜஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.