சாலை விபத்தில் சிக்கிய நபர்... ஆம்புலன்ஸ் கதவு திறக்கவில்லை... உயிரிழந்த சோகம்..
ஆம்புலன்ஸ் கதவி சரியான நேரத்தில் திறக்காத காரணத்தால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துகளின் போது சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட்டால் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை பெற உதவியாக அமையும். அது அவர்களின் உயிரை காக்கும் வகையில் அமைந்திவிடும். அதற்கு மாறாக ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் வந்தபோதும் ஒருவருடைய உயிருக்கு ஆபத்தாக அமைந்துள்ளது. அதற்கு காரணம் என்ன?
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நேற்று மாலை ஒரு சாலை விபத்து நடந்தது. அந்த சாலை விபத்தில் 66 வயது மதிக்க தக்க கோயாமோன் என்ற நபர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு அருகே இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவிக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலை தொடர்ந்து அங்கு வந்த ஆம்புலன்ஸில் கோயாமோனை ஏற்றி மருத்துவ சிகிச்சை அனுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க: பணக்காரர்கள் பட்டியல்! அம்பானியை தட்டித்தூக்கிய அதானி.. மின்சாரம் முதல் துறைமுகம் வரை.. எப்படி சாத்தியம்?
அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் கொண்டு சென்றுள்ளது. அங்கு சென்ற உடன் ஆம்புலன்ஸ் கதவு திறக்க முடியாமல் போனதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் சில நேரம் முயற்சி செய்து பார்த்துள்ளனர். எனினும் அந்த கதவை அவர்களால் திறக்க முடியவில்லை. அதன்பின்னர் அங்கு இருப்பவர்களின் உதவியுடன் கண்ணாடியை உடைத்து ஆம்புலன்ஸ் கதவை திறந்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது கோயாமோனை அவர்கள் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றியுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கோயாமோன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்த போதும் ஆம்புலன்ஸ் கதவு திறக்க முடியாததால் ஒருவர் உயிரிழந்த சமப்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆம்புலன்ஸ் வந்தும் ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போன சம்பவம் அங்கு சிலரை சோகத்தை ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தவறு நடக்காமல் சரி செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் கொடுக்கல.. இறந்த மகளின் சடலத்தை 10 கிமீ சுமந்து நடந்த தந்தை:
லகன்பூர் கிராமத்தில் இருந்த மருத்துவ மையத்தில் ஈஸ்வர் தாஸ் தன் மகளை அனுமதித்த போது மருத்துவர் வினோத் பார்கவ் சிறுமிக்கு காய்ச்சல் அதிகரித்திருப்பதாகவும், அவர் உயிர் பிழைப்பது கடினம் எனக் கூறியுள்ளார். மறுநாள் காலையில் சிறுமி உயிரிழந்தவுடன். அவரின் தந்தை ஈஸ்வர் தாஸ் வேன் ஒன்றைக் கோரியுள்ளார். பல மணி நேரங்கள் தாமதம் ஏற்பட்டதால் அவரே தன் மகளை சுமந்து சென்றுள்ளார்.
மருத்துவர் தரப்பில், வேன் காலை 9.20 மணிக்கு வந்தடைந்ததாகவும், ஈஸ்வர் தாஸ் அதற்கு முன்பே சிறுமியை சுமந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஈஸ்வர் தாஸ் தன் மகள் எதுவும் சாப்பிடவில்லை எனவும், அப்போதும் ஊசி செலுத்தப்பட்டதே அவரது மரணத்திற்குக் காரணம் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதற்குப் பிறகு, அதே பகுதி இடம்பெற்றிருக்கும் அம்பிகாபூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மாநில சுகாதாரத்துறை அமைச்சரான டி.எஸ்.சிங் தியோ இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:50 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்... நகை, புத்தாடைகளை பரிசாகக் கொடுத்த விருந்தினர்!