மேலும் அறிய

தங்கத்தேரில் வந்தது ஓணம்.. கேரளா Saree எனப்படும் கசவு சேலைகள் பத்தி தெரியுமா?

பெரும்பாலான கேரள கசவு புடவைகள் பட்டால் நெய்யப்படுகிறது, இதனை ஓணம் பண்டிகையின்போது கேரள பெண்கள் அதிக அளவில் அணிவார்கள்

தென்னிந்தியாவை பொறுத்த வரை குறிப்பாக கேரளத்தில்,அம்மாநில மக்கள் திருவோண நன்னாளை மிக விமர்சியுடன் கொண்டாடுகிறார்கள். கடவுள் விஷ்ணுவின், வாமன அவதாரத்தை போற்றும் விதமாகவும், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக,மிக சிறப்பான சத்யா எனப்படும், 26-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை படைத்து, வீட்டு   வாசலில் வண்ண பூக்களால் கோலமிட்டு,வீட்டில் இருக்கும் அனைவரும் பாரம்பரிய வண்ண புத்தாடைகளை அணிந்து கொண்டு, மாமன்னர் மகாபலி சக்கரவர்த்தியை வீட்டிற்கு வரவேற்க தயாராக இருப்பர். இன்றைய தினத்தில் கேரள பெண்கள்,ஆகச்சிறப்பானது ஒரு  புடவையை அணிவார்கள்.இந்தச் புடவையானது, வெள்ளை நிறத்தில், தங்க நிற ஜரிகைகளை கொண்ட, பார்டர் வைத்து மிகஅழகாக காட்சியளிக்கும்.

இந்த ஆண்டு திருவோண பண்டிகையானது நாளை விமரியாக கொண்டாடப்படவுள்ளது. இதில் பாரம்பரியமிக்க,கேரள பெண்களுக்கே உரித்தான, கசவு சேலைகளை தங்கள் விருப்பப்பட்ட விதத்தில் உடுத்திக் கொள்ள வசதிகள் இருக்கிறது. இந்த கசவு சேலைகள் பல விதங்களில் கிடைக்கின்றன.அவை என்னென்ன வகைகளில் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.

பருத்தி கேரளா கசவு புடவைகள்:

பெரும்பாலான கேரள கசவு புடவைகள் பட்டுகளால் செய்யப்படுகின்றன. ஆகவே இந்த பட்டுப் புடவைகளுக்கு கூடுதலாக  பராமரிப்பு தேவைப்படுகிறது. இருப்பினும், பருத்தி துணியிலும் கூட பல பாரம்பரிய கசவு சேலைகள் உள்ளன.அவை அணிய எளிதானவை மற்றும் அதிகபட்ச வசதியை தருகின்றன.

 பார்டர்களுடன் கூடிய கேரள கசவு புடவைகள்:

பல வகையான கேரள கசவு புடவைகளில் மெல்லிய தங்க நிற பார்டர் இருக்கும். இவை பொதுவாக சேலை தயாரிக்க பயன்படும் துணியில் தைக்கப்படும். இருப்பினும், ஜரி என்றும் அழைக்கப்படும் தங்க நூலைப் பயன்படுத்துவதே அதற்கு ஒரு அழகான பளபளப்பைக் கொடுக்கிறது. பிரகாசமான தங்க நிற ஜரி பார்டர் கொண்ட கசவு புடவை, நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் கண்களை விட்டு  அகலாது என்பது  நூறு சதவீதம் உண்மை.

எம்பிராய்டரி கொண்ட தூய பட்டு கசவு 

ஓணம் கொண்டாட்டங்களின் போது பலர் நுட்பமான புடவைகளுடன் தங்களை அழகுபடுத்திக் கொள்ள விரும்புகிறார்கள், உங்களுக்கு என  ஒரு அழகான தோற்றத்தை நீங்கள் தேர்வு செய்ய முடியும். ஆடம்பரமான பட்டுப்புடவைகள் மற்றும் பார்டர்களில் அதி நுட்பமான எம்பிராய்டரி வேலைகளைக் கொண்ட கசவு புடவைகளை நீங்கள் அணிவதன் மூலம் மிக உயர்ந்த,நேர்த்தியான அழகினை பெறலாம்.

மயில்கள், மலர் வடிவங்கள் 

இந்த ஓணத்தில் உங்களுக்கு  பல்வேறு சமகால விருப்பங்கள் உள்ளன. இன்றைய தினத்திற்கான உங்கள் அலங்காரத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது மென்மையான வண்ணங்கள் மற்றும் நூலின் தேர்வு ஆகியவற்றிலிருந்து தேர்வு செய்யுங்கள். ஏனெனில் மயில்கள் முதல் மலர் வடிவங்கள் வரையிலான கலப்பு துணி  கசவு புடவைகள் உங்களை மேலும் அழகாகும்.

சேலை என்பது தென்னிந்திய பாரம்பரியத்தில் தமிழ்நாடு,ஆந்திரா கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தினம் தோறும் மற்றும் விசேஷ நாட்களில், பெண்களால் விரும்பி உடுத்தப்படும் ஒரு உடையாகும்.அதிலும் கேரள பெண்கள் இந்த திருவோண திருநாளில் அணியும் இத்தகைய கசவு புடவைகள்,கடவுளின் தேசத்தில் தேவதைகள்,பூமியில் நடமாடுவதைப் போன்ற அழகான தோற்றத்தை உருவாக்கும்.ஆகையால் நீங்கள் கேரள வாசியாக இல்லாமல் இருந்தாலும் கூட, இந்த ஓணம் தினத்தில்,ஒரு கசவு புடவை அணிந்து பார்த்து,உங்கள் அழகை மேலும் கூட்டுங்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜயின் கடைசி படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் தளபதி
விஜயின் கடைசி படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் தளபதி
"ராமரை நீக்க முயற்சி செய்தால் நாடு இருக்காது" தடாலடியாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
Breaking News LIVE 14 Sep: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE 14 Sep: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annapoorna Srinivasan | அன்னபூர்ணா Thuglife! நிர்மலாவுக்கு பதிலடி! Cream Bun சம்பவம்Nirmala Sitharaman angry : வழிமறித்த இளைஞர்! வெடுக்குனு பேசிய நிர்மலா! ”டெல்லிக்கு வந்து பேசுங்க”Rahul Gandhi Annapoorna issue : ”ஆணவமா நிர்மலா? திமிர் பிடித்த பாஜக” எகிறி அடித்த ராகுல்Annamalai Apology to Nirmala Sitharaman on annapoorna srinivasan issue : பணிந்தது பாஜக!மன்னிப்பு கேட்ட அ.மலை!நிர்மலாவுக்கு பின்னடைவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜயின் கடைசி படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் தளபதி
விஜயின் கடைசி படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் தளபதி
"ராமரை நீக்க முயற்சி செய்தால் நாடு இருக்காது" தடாலடியாக பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
Breaking News LIVE 14 Sep: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE 14 Sep: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - பிரதமர் மோடி பேச்சு
திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? ஓப்பனாக பேசிய திருமாவளவன்!
திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? ஓப்பனாக பேசிய திருமாவளவன்!
"என்னால நேத்து நைட் தூங்க முடியல" போராட்டக் களத்தில் மருத்துவர்கள் முன்னிலையில் மம்தா உருக்கம்!
ஆஹா! பிரியாணி விலை குறைய வாய்ப்பிருக்கா? பாசுமதி அரிசியின் அடிப்படை விலையை நீக்கும் மத்திய அரசு
ஆஹா! பிரியாணி விலை குறைய வாய்ப்பிருக்கா? பாசுமதி அரிசியின் அடிப்படை விலையை நீக்கும் மத்திய அரசு
Bigg Boss 8: புதுப்புது டாஸ்க்குகள்! ரசிகர்களை கவர பிக்பாஸ் போடும் ஸ்கெட்ச்! அசத்துவாரா விஜய்சேதுபதி?
புதுப்புது டாஸ்க்குகள்! ரசிகர்களை கவர பிக்பாஸ் போடும் ஸ்கெட்ச்! அசத்துவாரா விஜய்சேதுபதி?
Embed widget