Kathak Dancer Pandit Birju Maharaj | உன்னை காணாத நான் இங்கு.! விஸ்வரூபம் புகழ் கதக் கலைஞர் பிர்ஜு மகாராஜ் காலமானார் !
83 வயதான பிர்ஜூ மகாராஜ் நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டார்.
இந்தியாவின் மிகப்பெரும் கதக் கலைஞர்களில் ஒருவர் பிர்ஜு மகாராஜ். இவர் திரைத்துறையிலும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளார். விஸ்வரூபம் திரைப்படத்திற்காக கமல்ஹாசன் கதக் நடனத்தை பிர்ஜு மகாராஜிடம்தான் பயின்றார்.
அதுமட்டுமின்றி, அந்தப் படத்தில் வரும் 'உன்னை காணாத நான் இங்கு நான் இல்லையே விதை இல்லாமல் வேர் இல்லையே' என்ற பாடல் மிகவும் பிரபலமாகும். அந்தப் பாடலில் கமல் ஹாசன் கதக் நடனம் ஆடி அனைவரது புருவங்களையும் உயர செய்திருப்பார்.
Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலை!
அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தவரும் பிர்ஜு மகாராஜ் ஆவார். இப்பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக அவருக்கு சிறந்த நடன அமைப்பாளருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
அதேபோல் விஸ்வரூபம் படத்துக்கு மட்டுமின்றி பாஜிராவ் மஸ்தானி என்ற திரைப்படத்திற்காகவும் அவர் தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருதுகள் மட்டுமின்றி இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதையும் பிர்ஜு பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், 83 வயதான பிர்ஜூ மகாராஜ் நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டார்.
Pandit Bijrju Maharaj, India’s fondest and one of the best Kathak dancers died at his residence on Sunday, after suffering a heart attack.Pandit Ji was the awardee of the second-highest civilian award in the country - Padma Vibhushan.
— Mrityunjai Pratap Singh Rajput (@singhmrityunja9) January 17, 2022
🙏🙏 OM SHANTI 🙏🙏#BirjuMaharaj#Kathak pic.twitter.com/sW0sIz1yL9
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பிர்ஜு மகாராஜாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜூ மகாராஜ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பிர்ஜு, சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிர்ஜு மகாராஜின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. மேலும், அவரது மறைவுக்கு திரையுலைனர் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்