மேலும் அறிய

Hubballi Riots Case : கலவர வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கைதான ஸ்ரீகாந்த் பூஜாரி.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

கர்நாடக மாநிலம் ஹூப்ளி கலவரத்தை ஏற்படுத்தியது, வன்முறையில் ஈடுபட்டு கடைகளை எரித்தது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஸ்ரீகாந்த் பூஜாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, கடந்த 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத், பாஜக உள்ளிட்டவற்றால் நடத்தப்பட்ட ராம ஜென்மபூமி இயக்கத்தின் கீழ் 'கரசேவகர்களால்' திரட்டப்பட்டு, மசூதி இடிக்கப்பட்டது. 
கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதி இடிக்கப்பட்டது, இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக பதிவானது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. அந்த வகையில், கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டம் சன்னப்பேட்டை கிராமத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது, வன்முறையில் ஈடுபட்டு கடைகளை எரித்தது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஸ்ரீகாந்த் பூஜாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நடந்த கலவரங்கள்:

கடந்த 31 ஆண்டுகளில், பூஜாரி மீது  16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரம் மற்றும் காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 1991 ஆம் ஆண்டை தவிர, 1999, 2001 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கலவரம் நடந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில்தான் பூஜாரி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, கர்நாடக முழுவதும் பாஜகவினர் போராட்டம் மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, கலவர வழக்கில் பிணை கோரி பூஜாரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஹூப்ளி மாவட்ட நீதிமன்றம், அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

பூஜாரிக்கு பிணை வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தரப்பு வழக்கறிஞர் சஞ்சீவ் பாட்ஷாக், "நீதிமன்ற உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவு நகலை இன்னும் பார்க்கப்படவில்லை. பூஜாரி, நாளை மாலை சிறையில் இருந்து வெளியே வருவார்" என்றார்.

குற்றம்சாட்டப்பட்ட பூஜாரிக்கு பிணை: 

கலவர வழக்கை தவிர, சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் சட்ட விரோதமாக மதுபானத்தை விற்றதாகவும் பூஜாரி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவர் ஒருபோதும் நீதிமன்றத்தில் ஆஜராகியதில்லை என்றும் ஹூப்பள்ளி போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே, அவர் ஆட்டோரிக்சா ஓட்டுநராக பணியாற்றி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30, 2020 அன்று, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பை அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது. செய்தித்தாளில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களை ஆதாரமாக நம்ப வழக்கின் நீதிபதி மறுத்துவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget