மேலும் அறிய

Siddaramaiah Condemns Amit Shah: ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி.. அமித்ஷாவின் பேச்சுக்கு சித்தராமையா, கனிமொழி கண்டனம்..!

வேற்று மாநில மக்கள், பொது மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஹிந்தியில் பேச வேண்டும் என்று அமித்ஷா கூறியதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்த ராமையா மற்றும் திமுக எம்.பி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

வேற்று மாநில மக்கள், பொது மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஹிந்தியில் பேச வேண்டும் என்று அமித்ஷா கூறியதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர்சித்த ராமையா மற்றும் திமுக எம்.பி கனிமொழி ஆகியோர்  கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, “ கர்நாடக ஏகிகரணா இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்களின் முயற்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து கலாச்சார பயங்கரவாதத்தை பாஜக கட்டவிழ்த்து விடுவதாக இருக்கிறது. 

மாநிலங்களுக்கு மொழி சுதந்திரம், கலாச்சார சுதந்திரத்தை அதிகமாக வழங்கவேண்டிய நேரம் இது என பாஜக உணர அனைத்து அகில இந்திய போட்டி தேர்வுகளும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும். இந்தி திணிப்பை தவிர்க்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அனைத்து மாநில மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். 

கனிமொழி

இது குறித்து கனிமொழி கூறும் போது, ”இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறியிருக்கிறார். 
 
அமித்ஷா பேசியது என்ன?

நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய அமித்ஷா, `ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது `இந்திய மொழியில்' இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது'' என்றார். 

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘”நாட்டின் அலுவல் மொழியாக இந்தியை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது இந்தி மொழியில் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். வேற்று மாநில மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளும்போது பயன்படுத்த வேண்டிய மொழி இந்திதான். ஆங்கிலம் அல்ல. ஒரு மாநிலத்தின் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும் கூறுகையில், ”பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றாத வரையில், அந்த மொழியை மக்களிடம் பரப்ப முடியாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் அடிப்படை அறிவைக் கொடுக்கவேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். இந்தி மொழியாக இருக்க வேண்டும்.’ என்று பேசினார்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget