Karnataka MLA Remarks: ‛தடுக்க முடியலையா... அனுபவியுங்கள்...’ பாலியல் வல்லுறவு பற்றி காங்., எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!
மாநிலத்தின் விவசாயிகள் பிரச்சனைகளை குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்
“ பாலியல் வல்லுறவை தடுக்க முடியாவிட்டால், அடிபணிந்து அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பழமொழி உள்ளது” என்று கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
கர்நாடக சட்டப்பேரைவயின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று, மாநிலத்தின் விவசாயிகள் பிரச்சனைகளை குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
#SHOCKING #Karnataka #MLAs #triviliazes #Rape in #assembly *There is a saying, When rape is inevitable, lie down and enjoy it' says former Speaker and congress MlA #RameshKumar during seeking more time on farmer issues. While current speaker Kageri laughs it off. pic.twitter.com/sWgQGK9jmi
— Imran Khan (@KeypadGuerilla) December 16, 2021
இதற்கு, ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் பேசிய சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, " ஒவ்வொருவரும் தன்னிச்சையாக நேரம் ஒதுக்க கேட்டால் அவையை சிறப்பாக நடத்த முடியாது. உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை புரிந்து கொண்டு சுயமாக செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார். மேலும், முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான ரமேஷ் குமாரைப் பார்த்து," இத்தகைய இக்கட்டான சூழலை அனுபவிக்கத் தான் வேண்டும். என்னால், அவை நடவடிக்கைகள் ஒழுங்கு படுத்த முடியாது என்று உணர்கிறேன்" என்று தெரிவித்தார்.
Such shameless, sick, people. https://t.co/NwyuOh6Jt3
— Rohini Singh (@rohini_sgh) December 16, 2021
இதற்கு எதேச்சையாக பதிலளித்த ரமேஷ் குமார்,“ பாலியை வல்லுனர்வை தடுக்க முடியாவிட்டால், அடிபணிந்து அதனைப் பெண்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பழமொழி உள்ளது” என்று தெரிவித்தார். இவரின் இந்த பேச்சைக் கண்டிக்காமல் சபாநாயகரும் உடன் சேர்த்து சிரித்த சம்பவம் தர்போது பேசும் பொருளாகி வருகிறது.
மன்னிப்பு கோரினார்:
இந்நிலையில் தனது தவறுதலான கருத்துக்கு ரமேஷ் குமார் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதவில், " பாலியல் வல்லுறவு பற்றிய அலட்சியமான தவறுதலான கருத்துக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பாலியல் குற்றங்களை சிறுமைபடுத்த வேண்டும் (அல்லது) அலட்சியப்படுத்துவதோ எனது நோக்கம் அல்ல. இனிமேல் கவனமாக என் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பேன்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்