மேலும் அறிய

CJI DY Chandrachud: ”இதெல்லாம் நீதிபதிகள் வேலை இல்லை, 5 பேருக்கு உடம்பு சரியில்லை” - தலைமை நீதிபதி என்ன பேசினார்?

தங்கள் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளிப்பது, நீதிபதிகளின் வேலை கிடையாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.

தங்கள் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளிப்பது, நீதிபதிகளின் வேலை கிடையாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார்.

மனுதாரர் கோரிக்கை:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளம் தலைவரான அபிஷேக் பானர்ஜிக்கு எதிரான வழக்கை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், மனுதாரருக்கு எதிராக தொலைக்காட்சியில் பேசியதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

”நீதிபதிகள் வேலை கிடையாது”

இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”தங்கள் முன் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளிப்பது நீதிபதிகளின் வேலை கிடையாது.  மனுதாரர் குறிப்பட்டதை போன்று நீதிபதி நேர்காணலில் பேசி இருந்தால் இந்த வழக்கு விசாரணையில் இனி அவரால் நிச்சயமாக பங்கேற்க முடியாது” என தலைமை நீதிபதி பேசினார்.

நேர்காணல் கொடுத்தாரா?

அரசு தரப்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அபிஷேக் பானர்ஜி மீது சுமத்தப்பட்டு இருப்பது மிகப்பெரிய ஊழல் என குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி “ஊழல் தொடர்பாக நாங்கள் எதுவும் கேட்கவில்லை. நீதிபதி நேர்காணல் கொடுத்தாரா, அரசியல் தலைவர் தொடர்பாக மனுதாரர் குறிப்பிட்டதை போன்று பேசினாரா, விசாரணைக்காக வேறு நீதிபதியை நியமிக்க வேண்டுமா? என்பது பற்றியே வினவுவதாக” கூறினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

வழக்குகள் நிலுவை:

முன்னதாக இன்றைய நீதிமன்ற நடவடிக்கை தொடங்கியபோது, தங்கள் வழக்குகளை முன்கூட்டியே அல்லது அவசரமாக பட்டியலிட வேண்டும் என சில வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், ”சில நீதிபதிகள் கிடைக்காததால் இன்றைய தேதிகள் வழங்கப்பட்ட வழக்குகள் தடுக்கப்படாது. அதேநேரம்,  ஐந்து நீதிபதிகள் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். அடுத்த தேதி அல்லது அதற்கடுத்த இதர தேதியில் குறிப்பிட்ட வழக்குகளை விசாரிக்க அவர்களை பட்டியலிடுவோம்” என கூறினார்.

தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை நாடாளுமன்றத்தால் திருத்த முடியாது என்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க கேசவானந்த பாரதி தீர்ப்பின் 50வது ஆண்டு நிறைவையொட்டி, உச்ச நீதிமன்றம் 13 நீதிபதிகள் கொண்ட பெஞ்சின் 13 கருத்துகள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளது என்றும் தலைமை நீதிபதி அறிவித்தார்.

தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கு:

இதனிடையே, தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்களை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் இடம்பெற்றுள்ள, சில நீதிபதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget