வாழ்க்கையை ரசிக்க இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

Published by: விஜய் ராஜேந்திரன்

ரசித்து அனுபவிக்க

வாழ்க்கை தருகின்ற ஒவ்வொரு நொடியையும் வீணடிக்காமல் ரசித்து அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும்

ஓய்வு

சோர்வாக உணரும் பொழுது அல்லது மன அழுத்தம் மிகுந்திருக்கும் பொழுது ஓய்வெடுப்பது மிகவும் அவசியம்

தனிப்பட்ட வளர்ச்சி

நம் தனிப்பட்ட வளர்ச்சியிலும் ஈடுபாடு காட்டுவது அவசியம். நமக்கென்று கொஞ்ச நேரத்தை ஒதுக்க தெரிந்திருக்க வேண்டும்

ரசிக்கும் தன்மை

பிடித்த புத்தகங்களை படிப்பது, காலாற நடப்பது, வார இறுதியில் சிறு பயணத்தை மேற்கொள்வது போன்றவை வாழ்க்கையில் ரசிக்கும் தன்மையை கூட்ட உதவும்

சமூக ஊடகம்

சமூக ஊடகங்களை குறைவான அளவு பயன்படுத்தி மனிதர்களுடன் பேசிப் பழக நிறைய நேரம் ஒதுக்குவது வாழ்வில் ரசிக்கும் தன்மையை அதிகரிக்கும்

நிதானமாக இருப்பது

சுத்தமான இடங்கள் நம்மை நிதானமாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர வைக்கும்

ஆரோக்கியம்

ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்வில் எதையும் மகிழ்ச்சியுடன் ரசிக்க முடியும். அதற்கு தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி மற்றும் தியானம் பழகுவது நல்லது

மகிழ்ந்து மகிழ்விப்போம்

மகிழ்ச்சியாக இருக்கிற ஒருவரால்தான் மற்றவருக்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியும். எனவே மகிழ்ந்து மகிழ்விப்போம்