Watch Video: 18,000 அடி உயர பனி மழையில் மேலாடையின்றி சூர்ய நமஸ்காரம்... காவலர் வீடியோ வைரல்!
இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வீரர் பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் ‘சூரிய நமஸ்காரம்’ செய்யும் வீடியோ ஒன்றை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நவீனமயமாக்கப்பட்ட காலக்கட்டத்தில், உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் . அதற்கு யோகா செய்ய வேண்டும் என்பதையே மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். யோகா என்பது மனதையும் உடலையும் ஒருங்கே செம்மை படுத்துகிறது. ஆசனங்கள், மூச்சு பயிற்சிகள் , தியானங்கள் உள்ளிட்டவை உடலை பலப்படுத்துவதோடு மனதிற்கும் ஆறுதலை தருவதாக கூறுகின்றனர் அதனால் பயனடைந்தவர்கள். யோகா தோன்றியது இந்தியாவில்தான் என்றாலும் உலக மக்களும் அதனை பின்பற்றுவதுதான் அதன் சிறப்பு.
அந்த வகையில், இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வீரர் பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் ‘சூரிய நமஸ்காரம்’ செய்யும் வீடியோ ஒன்றை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்ட பதிவில், “ஊக்கமளிக்கிறது ஜெய்ஜவான்!! இந்த ITBP அதிகாரி லடாக்கில் 18,000 அடி உயரத்தில் பனி மற்றும் பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையில் 'யோகா' நிகழ்த்துவது நிச்சயமாக அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் 'யோகா' பயிற்சி செய்வோம்|”. என்று தெரிவித்திருந்தார்.
Inspiring!! #JaiJawan
— Prakash Javadekar (@PrakashJavdekar) July 20, 2022
This ITBP officer performing '#Yoga' at 18,000 feet in Ladakh in snow conditions & sub-zero temperatures will certainly inspire and motivate everyone.
Lets practice 'YOGA' for everyday for a healthy life!#Yogaforlife #YogaForHumanity @ITBP_official pic.twitter.com/iSYyBnTzc7
லடாக்கின் குளிர்ச்சியான குளிரில் மேல் சட்டை இல்லாமல் இந்த காவலர் யோகா போஸ் கொடுத்து பயிற்சி மேற்கொண்டார். இது அந்த காவலரின் தைரியத்தையும், உடற்தகுதியையும் வெளிப்படுத்துகிறார். சுமார் 18,000 அடி உயரத்தில் ராணுவ வீரர் யோகா மேற்கொள்ளும் வீடியோவை நெட்டிசன்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
யோகா உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்தும் :
30 வயதிற்குப் பிறகு, நாம் தசை பலத்தை இழக்கத் தொடங்குகிறோம், இதன் விளைவாக நமது இயக்கம் குறையும். "யோகா பயிற்சி வலுவான தசைகளுக்கு வழிவகுக்கும். 200 பெண்கள் விருகசனம் (மரம் போஸ்) மற்றும் விரபத்ராசனம் II (வாரியர் II) உள்ளிட்ட 12 யோகாசனங்களை இரண்டு வருடங்களாக ஒரு நாளைக்கு 12 நிமிடங்களுக்கு பயிற்சி செய்தனர் இதன் மூலம் அவர்களின் யோகா எலும்பின் அடர்த்தியை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்