மேலும் அறிய

இ.ஓ.எஸ்-08 செயற்கைகோள் நாளை வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம்!

பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில் திட்டமிட்ட இலக்கான 475 கிமீ தூரத்தில் பிரதான செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்-08யும், தொடர்ந்து 16வது நிமிடத்தில் மாதிரி செயற்கைகோளையும் நிலை நிறுத்திவிடும்.

செயற்கைக்கோள் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்: 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதி நவீன இ.ஓ.எஸ் -08  என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறிய ரக எஸ். எஸ்.எல்.வி. டி-3 மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை (16.08.24) அன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் ஆயுட்காலம் ஓராண்டு ஆகும். மேலும் இந்த செயற்கைக்கோள் தரையில் இருந்து 475 கி.மீ தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.  இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்களை தொலைதொடர்பு பயன்பாட்டிற்காக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இ.ஓ.எஸ் -08 என்ற செயற்கைக்கோளும் நாளை காலை 9.17 மணிக்கு சதீஷ் தவன் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து  விண்ணில் சீறிப்பாய இருப்பது குறிப்பிடத்தக்கது.

இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளின் பயன்பாடு:

இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவிடோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இ.ஓ.ஐ.ஆர் கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புகாக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும். அதேபோல ஜி.என்.எஸ்.எஸ்.ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர் நிலைகளை கண்டறிதல், தீ கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்க உதவுகிறது. எரிமலை செயல்பாடு கண்காணிப்பு மற்றும் தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவை இந்த பேலோடின் செயல்பாடாகும். இந்த  நிலையில் இன்று அதிகாலை 3.17 மணிக்கு இதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. தொடர்ந்து ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. அதோடு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து  விண்ணில் ஏவுவதற்கான இறுதிக்கட்ட  பணிகளை செய்து வருகின்றனர்.

ஆந்திராவில் விஞ்ஞானிகள் குழுவினர் சாமி தரிசனம்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு  இன்று அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதியான  நாளை காலை விண்ணில் புதிய செயற்கைக்கோள் சீறிப்பாய உள்ளது. குறிப்பாக பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில் திட்டமிட்ட இலக்கான 475 கிலோ மீட்டர் தூரத்தில் பிரதான செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்-08யும், தொடர்ந்து 16வது நிமிடத்தில் மாதிரி செயற்கைகோளையும் நிலை நிறுத்திவிடும். இந்த நிகழ்வு நாளை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று இஸ்ரோ குழுவினர் ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget