SSLV D1-EOS-2 Launched: 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்!
SSLV D1-EOS-2 Launched: இஓஎஸ் 02, ஆஸாதிசார் என்ற எடை குறைந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன் இந்த எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
6 மணி நேர கவுண்ட்டவுன்
அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணிநேர கவுண்ட் டவுன் முடிந்த நிலையில் சரியாக 9.18 மணிக்கு 2 செயற்கைக் கோள்களுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இஓஎஸ் 02, ஆஸாதிசார் என்ற எடை குறைந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன் இந்த எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் முன்னதாக விண்ணில் ஏவப்பட்டது.
#WATCH ISRO launches SSLV-D1 carrying an Earth Observation Satellite & a student-made satellite-AzaadiSAT from Satish Dhawan Space Centre, Sriharikota
— ANI (@ANI) August 7, 2022
(Source: ISRO) pic.twitter.com/A0Yg7LuJvs
மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!
பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்
ஆஸாதிசாட் செயற்கைக் கோளை 75 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கூட்டு உழைப்பில் உருவாக்கியுள்ளது.
8 கிலோ எடை கொண்ட ஆஸாதிசாட்டில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்ஃபி கேமரா உள்ளது. 142 கிலோ எடை கொண்ட EOS - 02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
பிஎஸ் எல்வி, ஜிஎஸ் எல்வி போன்று முதன்முறையாக இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளது. இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று 25 மணிநேரம் இல்லாமல் குறைந்த கவுன்ட்டவுன் நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
சிறிய ரக ராக்கெட் ஜிஎஸ்எல்வி
நாட்டின் தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள்கள் குறித்த திட்டங்களை செயல்படுத்து வரும் இஸ்ரோ நிறுவனம், இதற்காக பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை செயற்கைக்கோள்களையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.
இந்த நிலையில், 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது.
மேலும் படிக்க: OPS Statement : "நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகளவில் வெளிமாநில பொறியாளர்கள்"..! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்