Chandrayaan 3: சந்திரயான் 3 விண்கலம்: விக்ரம் லேண்டரின் அறிவியல் கருவியின் ஆய்வு முடிவுகளை வெளியிட்ட இஸ்ரோ..
நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டரில் இருக்கும் RAMBHA LP அறிவியல் கருவி உறுதி செய்துள்ளது.
நிலவில் தரையிறங்கியுள்ள விக்ரம் லேண்டரில் இருக்கும் RAMBHA LP அறிவியல் கருவியின் ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதில் நிலவின் மேற்பரப்பு அருகே பிளாஸ்மா இருப்பதை அறிவியல் ஆய்வு கருவி உறுதி செய்துள்ளது. சூரிய வெப்ப காற்றின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா உருவாகிறது. மேலும் ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான்கள் அடர்த்தி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 31, 2023
In-situ Scientific Experiments
Radio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere - Langmuir Probe (RAMBHA-LP) payload onboard Chandrayaan-3 Lander has made first-ever measurements of the near-surface Lunar plasma environment over the… pic.twitter.com/n8ifIEr83h
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம்.
இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது.
நிலவில் தரையிறங்கிய பின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் கால்தடம் பதித்தது. தற்போது பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிலவு தொடர்பாக இதுவரை அறியப்படாத பல்வேறு தகவல்களை சந்திரயான் 3 வழங்கும் என்பதோடு, சந்திரனின் மிகவும் மதிப்புமிக்க வளங்களில் ஒன்றான நீர் பனி பற்றிய ஏராளமான தகவல்கள் தென் துருவத்தில் இருந்து கிடைக்கப்பெறலாம் என்பதே இத்திட்டத்தின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும்.
முக்கியமாக நிலவின் தெந்துருவத்தில் மேற்பரப்பில் சில கனிமங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. அதாவது, நிலவில் சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது. அடுத்தக்கட்டமாக நிலவில் ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ரோவர் இறங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது விக்ரம் லேண்டரில் இருக்கும் RAMBHA LP அறிவியல் கருவியின் ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதில் நிலவின் மேற்பரப்பு அருகே பிளாஸ்மா இருப்பதை அறிவியல் ஆய்வு கருவி உறுதி செய்துள்ளது. இந்த கருவி முக்கியமாக மேற்பரப்பில் இருக்கும் எலக்ட்ரான்கள் மற்றும் ப்ளாஸ்மாவின் தன்மைகளை அல்லது அடர்த்தியை ஆய்வு செய்யும்.