(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video : 300 கிலோ தங்கம்.. சுற்றும் கட்டில்கள்.. இஷா அம்பானியின் இரட்டை குழந்தைகளுக்கு வரவேற்பு
சமூக ஊடக தளங்களில் பரவிய பல வீடியோக்கள் மற்றும் படங்களின்படி, இஷா அம்பானி, ஆனந்த் பிரமல் மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளை இரு தரப்பு குடும்பத்தினரும் வரவேற்றனர்.
சமூக ஊடக தளங்களில் பரவிய பல வீடியோக்கள் மற்றும் படங்களின்படி, இஷா அம்பானி, ஆனந்த் பிரமல் மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளை இரு தரப்பு குடும்பத்தினரும் வரவேற்றனர்.
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தனது கணவர் ஆனந்த் பிரமல் மற்றும் அந்த தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுடன் சனிக்கிழமை மும்பை வந்தார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய தம்பதிக்கு வோர்லியில் உள்ள கருணா சிந்து இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நவம்பர் 19, 2022 அன்று இஷா அம்பானி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, தம்பதிகள் இந்தியா திரும்புவது இதுவே முதல் முறை. ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா என்று பெயரிடப்பட்ட நிலையில், பெண் குழந்தைக்கு ஆத்யா என்று பெயரிடப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளங்களில் பரவிய பல வீடியோக்கள் மற்றும் படங்களின்படி, தம்பதியினர் மற்றும் குழந்தைகளை இருதரப்பு குடும்பங்களும் வரவேற்றனர். முகேஷ் அம்பானியுடன் மனைவி நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி மற்றும் அஜய் பிரமல் ஆகியோர் உடன் இருந்தனர். மும்பையைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி அவர்கள் வருகையின் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
டிசம்பர் 25 ஆம் தேதி குடும்பம் சில விழாக்களை நடத்துவதாக கூறப்படுகிறது. அறிக்கைகளில் கூறப்படுவது நம்பப்படுமானால், அவர்கள் அந்த நிகழ்வில் சுமார் 300 கிலோகிராம் தங்கத்தையும் நன்கொடையாக வழங்குவார்கள். இந்தியா முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் இருந்து பல பூசாரிகள் நாளை கருணா சிந்துவில் கலந்து கொள்ள உள்ளனர்.
View this post on Instagram
2018 டிசம்பரில் ஆண்டிலியாவில் நடந்த நட்சத்திர நிகழ்வில் ஆனந்த் உடன் இஷா திருமணம் செய்து கொண்டார். ஆனந்த் கோடீஸ்வரரான அஜய் பிரமல் மற்றும் ஸ்வாதி பிரமல் ஆகியோரின் மகன் ஆவார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "ஈஷா மற்றும் குழந்தைகள், பெண் குழந்தை ஆதியா மற்றும் ஆண் குழந்தை கிருஷ்ணா நலமாக உள்ளனர். ஆதியா, கிருஷ்ணா, ஈஷா மற்றும் ஆனந்த் ஆகியோருக்கு உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் வேண்டுகிறோம்" என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.