Sameer Wankhede: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஷாருக்கான் மகன்.. அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிட மாற்றம்..
ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கை முறையாக விசாரிக்காத சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கை முறையாக விசாரிக்காத சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி மும்பைக்கு வந்த சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அந்த கப்பலில் சோதனை நடத்தியது. அதன்பின்னர் அக்கப்பலில் இருந்து 13 கிராம் கஞ்சா மற்றும் 1.33 லட்சம் பணம் ஆகியவற்றை கைப்பற்றியதாக கூறியது. அத்துடன் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேரை இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஆர்யன் கானிற்கு கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கை விசாரித்து வந்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே முறையாக விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதன்காரணமாக அவர் அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சமீர் வான்கடே தற்போது சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னையிலுள்ள வரிசெலுத்துபவர்களுக்கான சேவைகள் இயக்குநரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆர்யான் கான் மற்றும் சிலரை கைது செய்த வழக்கில் அவர் முறையாக விசாரணை நடத்தாதது தொடர்பாக அவர் மீது விசாரணைக்கு மத்திய ரசு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில் இவருக்கு பணியிடை மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
IRS Sameer Wankhede transferred to DGTS (Director General of Taxpayers Services) Chennai.@news24tvchannel #AryanKhanDrugCase #SameerWakhende pic.twitter.com/bDT5y07hwh
— Sanket Pathak (@imsanketpathak) May 30, 2022
முன்னதாக ஆர்யன் கான் வழக்கை விசாரிக்கும் போதை பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி சமீர் வான்கடே மீது லஞ்சப் புகார் எழுந்தது. அதன் காரணமாக இந்த வழக்கு மாற்றப்பட்டதாக என்று பலரும் கூறி வந்தனர். ஆர்யன் கான் வழக்கின் முக்கிய சாட்சியமான கே.பி.கோசவியுடன் இருந்த பாதுகாவலர் பிரபாகர், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ரூ.8.லட்சம் லஞ்சமாகப் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தார். லஞ்சம் தொடர்பான விவாதத்தை கே.பி.கோசவி கேட்டதாகவும். அதனால்தான் அவர் தற்போது உயிர் அச்சத்தின் காரணமாகத் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்