மேலும் அறிய
IRCTC: ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் செய்துள்ள 13 நாள் சூப்பர் சுற்றுலா பேக்கேஜ்! முழு விவரம் இங்கே!
IRCTC:பாரத் கெளரவ் டூரிஸ்ட் ரயில் சேவை மூலம் தென்னிந்தியாவின் முக்கியமான மற்றும் புனிதமான பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது பற்றிய கட்டுரை.

பாரத் கெளரவ் டூரிஸ்ட்
சுற்றுலா செல்ல ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இந்தியாவின் தென்பகுதியில் உள்ள முக்கியமான இடங்களுக்கு சுற்றுலா செல்ல விருப்பம் இருந்தால் இந்த பதிவு உங்களுக்குதான்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ஒரு புதிய சுற்றுலா பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது. ஐஆர்சிடிசி தென்னிந்திய சுற்றுலா கழகம் பாரத் கெளரவ் டூரிஸ்ட் ரயில் சேவை மூலம் தென்னிந்தியாவின் முக்கியமான மற்றும் புனிதமான பகுதிகளான ஹைதராபாத், மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மஹாபலிபுரம், ஸ்ரீசைலம் உள்ளிட்ட பாரம்பரியம் மிக்க இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பயணம் ஆகஸ்ட் 9 ம் தேதி முதல் 21 தேதி முடிவடையும். டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 9-ம் தேதி சிறப்பு சுற்றுலா ரயில் புறப்படும். டெல்லி, மதுரா, சப்தர்ஜங், ஆக்ரா கான்ட், போபால், குவாலியர், இடார்சி , ஜான்சி, பினா மற்றும் நாக்பூர் ரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் ஏறலாம் மற்றும் இறங்கலாம்.

இந்த பேக்கேஜில் 13 பகல் 12 இரவுகள் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 53,970 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் பயண கட்டணம், மூன்று வேளை உணவு, 13 நாட்கள் தங்கும் கட்டணம் உள்ளிட்டவை அடங்கும். AC மற்றும் Non - AC வசதிகள் கொண்ட பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பயணத்திற்கான முன்பதிவை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்ய, ஐஆர்சிடிசி இணையதளம்-www.irctctourism.com என்ற வலைத்தளத்தில் நுழையவும். மேலும் முன்பதிவிற்கு IRCTC சுற்றுலா வசதி மையம், மண்டல அலுவுலகம் மற்றும் ரிஜனல் அலுவுலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தென்னிந்தியாவில் பல பாரம்பரியம் மிக்க சுற்றுலா தளங்கள், புனித வழிபாட்டு தளங்கள், சிறப்பு வாய்ந்த இடங்கள் என பல முக்கியமான இடங்கள் உள்ளன. வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த இடங்களுக்கு சென்று வருவது ஒரு நல்ல வாய்ப்பு. எனவே இந்த முக்கியமான இடங்களுக்கு பயணம் செய்ய விரும்புவோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சுற்றுலா பேக்கேஜ் மூலம் நல்ல ஒரு வாய்ப்பை பயணிகளுக்கு ஏற்பாடு செய்து தந்துள்ளது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC).
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement

470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement