மேலும் அறிய

'தேசவிரோத சக்திகளுக்கு துணை போகிறது இன்ஃபோசிஸ்' : ஆர்.எஸ்.எஸ் சார்பு பத்திரிகை குற்றச்சாட்டு

இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனம் இடதுசாரிகள், நக்சலைட்டுகள், இன்னும் சிறு சிறு குழுக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என குறிப்பிட்டுள்ளது

தேச விரோத சக்திக்கு துணைபோகிறார்கிறார்கள் என்னும் விமர்சனம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் சார்பு இதழான பஞ்சஜன்யாவில் இப்படி ஒரு விமர்சனக் கட்டுரை வெளியாகியிருந்தது.

அதில், இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனம் இடதுசாரிகள், நக்சலைட்டுகள், இன்னும் சிறு சிறு குழுக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தேசவிரோத போக்கைக் கடைபிடிக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவனம் வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சித்திருக்கலாம் என்றெல்லாம் குற்றஞ்சாட்டியுள்ளது. இன்போசிஸ் புதிய வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இந்நிலையில், இந்த சிக்கல்களை சுட்டிக்காட்டி பஞ்சஜன்யா இதழில் வெளியான கட்டுரையில் தான் மேற்கூறிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இதேபோன்ற மோசமான ஒரு சேவையை வழங்குமா? என்றும் அந்தக் கட்டுரையில் காத்திரமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முன்னதாக,  கடந்த மாதம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக்கை அழைத்து, போர்ட்டலில் உள்ள குறைபாடுகளை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் செய்துவிடும்படி அவகாசம் அளித்திருந்தார். இந்தப் பின்னணியில்தான் பாஞ்சஜன்யா இதழில் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலகி நிற்கும் ஆர்எஸ்எஸ்..

பஞ்சஜன்யா கட்டுரையை முன்வைத்து  ஆர்எஸ்எஸ், ஆர்.எஸ்.எஸ், பாஜக மீது விமர்சனங்கள் எழுந்துவர,  ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் கூறுகையில், "இந்திய நிறுவனமான இன்ஃபோசிஸ் நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்துள்ளது. இன்ஃபோசிஸ் உருவாக்கிய இ போர்டலில் சில சிக்கல்கள் இருக்கலாம். ஆனால், அதன் நிமித்தமாக பாஞ்சஜன்யா இதழில் வெளியான கட்டுரை அதை எழுதிய தனிநபரின் கருத்தே தவிர  ஆர்எஸ்எஸ்ஸின் கருத்து இல்லை. மேலும் பஞ்சஜன்யா ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழும் அல்ல. ஆகையால் அதில் வெளியாகும் கட்டுரைகளை  ஆர்எஸ்எஸ்ஸுடன் தொடர்புபடுத்தக் கூடாது" என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


தேசவிரோத சக்திகளுக்கு துணை போகிறது இன்ஃபோசிஸ்' : ஆர்.எஸ்.எஸ் சார்பு பத்திரிகை குற்றச்சாட்டு

இன்ஃபோசிஸ் முன்னாள் ஊழியரின் கோபம்:

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஎஃப்ஓ ஆன மோகன்தாஸ் பய் இது குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இபோர்டலில் சிக்கல் உள்ளதால் இன்ஃபோசிஸ் விமர்சனங்களுக்குத் தகுதியானது. தவறுகளைக் களைய இன்ஃபோசிஸ் வேலை செய்துவருகிறது. ஆனால், அதற்காக இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தேசவிரோத நிறுவனம் என்று விமர்சிப்பதும் சதித்திட்டங்களுடன் தொடர்புப்படுத்திப் பேசுவதும் மோசமான மனநிலையின் பிரதிபலிப்பு. அரசியலில் இப்படியான குற்றச்சாட்டுகள் எல்லாம் ஏற்புடையது. ஏனெனில் அரசியல்வாதிகள் ஒருவொருக்கொருவர் விமர்சித்துக் கொள்வதும் இயக்பே. ஆனால், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களை இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது சரியானது அல்ல என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Breaking News LIVE: ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்
Breaking News LIVE: ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்
Embed widget