Special Trains: இன்றும்.. நாளையும் தமிழ்நாட்டிற்கு 12 சிறப்பு ரயில்கள்.. எங்கெல்லாம்?
இண்டிகோ விமானம் ரத்தானதால் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. எங்கிருந்து? எங்கே வரை? என்பதை கீழே காணலாம்.

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே அறிவித்தது. அதன்படி , நாடு முழுவதும் 84 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கான சிறப்பு ரயில்கள் என்னென்ன? எத்தனை மணிக்கு புறப்படும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. நாகர்கோயில் - தாம்பரம்:
இன்று இரவு 11.15 மணிக்கு நாகர்கோயிலில் இருந்து புறப்படும் தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06012) நாளை காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
2. தாம்பரம் - நாகர்கோயில்:
நாளை மதியம் 3.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் நாகர்கோயில் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (06011) நாளை மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும்.
3. திருவனந்தபுரம் - சென்னை:
இன்று மதியம் 3.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ( 06108) நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
4. சென்னை - திருவனந்தபுரம்:
சென்னையில் இருந்து நாளை மதியம் 1.50 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் நார்த் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06107) நாளை மறுநாள் செவ்வாய் கிழமை திருவனந்தபுரத்திற்கு காலை 8 மணியளவில் சென்றடையும்.
5. கோவை - சென்னை:
கோயம்புத்தூரில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ( 06024) நாளை காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
6. சென்னை - கோவை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை மதியம் 12.20 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்(06023) நாளை இரவு 10.30 மணிக்கு கோவையை சென்றடையும்.
7. பெங்களூர் - சென்னை:
பெங்களூரில் இருந்து இன்று காலை 8.05 மணிக்கு புறப்பட்ட சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 06255) இன்று மதியம் 2.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
8. சென்னை - பெங்களூர்:
பெங்களூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்( 06256) சென்னை எழும்பூரில் இருந்து இன்று மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு இன்று இரவு 10.45 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
9. பெங்களூர் - சென்னை:
பெங்களூரில் இருந்து நாளை காலை 8.05 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ( 06257) ரயில் நாளை மதியம் 2.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வந்தடையும்.
10. சென்னை - பெங்களூர்:
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து நாளை மாலை 4.10 மணிக்கு புறப்படும் பெங்களூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ( 06258) பெங்களூருக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும்.
11. செகந்திரபாத் - சென்னை:
சென்னை எழும்பூரில் இருந்து இன்று மதியம் 12.30 மணிக்கு புறப்பட்ட செகந்திரபாத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (07147) தெலங்கானாவின் செகந்திரபாத்திற்கு நாளை காலை 3 மணிக்குச் சென்றடையும்.
12. சார்லபள்ளி - சென்னை:
ஹைதரபாத் அருகே உள்ள சார்லபள்ளியில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்படும் சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ( 06020) ரயில் நாளை காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். விமானம் ரத்தானதால் பாதிக்கப்பட்ட பயணிகள் மட்டுமின்றி பிற ரயில் பயணிகளுக்கும் இந்த சிறப்பு ரயில் உதவிகரமானதாக அமைந்துள்ளது.





















