(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video : போர்பந்தர் கடற்கரையில் தத்தளித்த 22 பணியாளர்கள்... விரைந்து கரையேற்றிய கடலோர காவல்படை!
போர்பந்தர் அருகே அரபிக்கடலில் தத்தளித்த வணிகக்கப்பலில் இருந்த 22 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குஜராத், போர்பந்தர் அருகே அரபிக்கடலில் தத்தளித்த வணிகக்கப்பலில் இருந்த 22 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கப்பலில் கடல்நீர் புகுந்ததால் உதவி கோரிய நிலையில் 22 பேரை கடலோர காவல்படையினர் மீட்டனர்.
கப்பலில் கட்டுப்பாடற்ற வெள்ளம் காரணமாக எம்டி குளோபல் கிங் கப்பலில் இருந்து பேரிடர் குழுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, இந்திய கடலோர காவல்படை இன்று குஜராத்தில் போர்பந்தர் கடற்கரைக்கு அருகே அரபிக்கடலில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
View this post on Instagram
இந்த கப்பல் போர்பந்தருக்கு மேற்கே 93 NM தொலைவில் உள்ளது என்றும், கோர் ஃபக்கான் UAE-கார்வார் இந்தியாவிலிருந்து செல்லும் வழியில் 22 பணியாளர்களுடன் கப்பல் தத்தளித்து வருகிறது என்றும் தகவல் கிடைத்ததையடுத்து, வணிகக் கப்பல்கள் உட்பட பிற நிறுவனங்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது. மேலும் ICG புதிதாக இயக்கப்பட்ட ஏஎல்ஹெச் துருவ் ஹெலிகாப்டர்களை மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டது.
#WATCH | Indian Coast Guard is carrying out rescue operations in Arabian Sea near Porbandar coast in Gujarat after a distress alert was received from MT Global King due to uncontrolled flooding onboard: ICG officials (1/2) pic.twitter.com/5vHKZgzrSc
— ANI (@ANI) July 6, 2022
இந்த நிலையில், கப்பலில் கடல்நீர் புகுந்ததால் உதவி கோரிய நிலையில் 22 பேரை கடலோர காவல்படையினர் மீட்டனர். குஜராத் கடற்கரை முழுவதும் கண்காணிப்பை அதிகரிக்க இந்திய கடலோர காவல்படை போர்பந்தரில் உள்ள அதன் ஏர் என்கிளேவில் உள்நாட்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரின் (ALH) MK III இன் படைப்பிரிவை நியமித்த சில நாட்களுக்குப் பிறகு இது வந்துள்ளது.
ஐசிஜி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, இந்த படைப்பிரிவை இயக்குவது தேடல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) மற்றும் கடல்சார் கண்காணிப்புத் துறையில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்