மேலும் அறிய

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐ.சி.எஃப்வில் தயாரிப்பு.. சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணம்!

சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலை, அடுத்த சில மாதங்களுக்கு பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர்.

ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலை, அடுத்த சில மாதங்களுக்கு பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர்.

உலக புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐ.சி.எஃப் ஆலையில், வந்தே பாரத் ரயில், எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயில், மெட்ரோ ரயில், அம்ரித் பாரத் ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கிடையில், இங்கு நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ரூ.118 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்புக்கு உகந்தது. முக்கிய நகரங்களில் இருந்து, குறுகிய துாரத்துக்கு மட்டுமே, தற்போது இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐ.சி.எஃப்வில் தயாரிப்பு.. சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணம்!

அதிகபட்சமாக 50 முதல் 80 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயிலில் 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம். ரயில் இன்ஜின் 1,200 குதிரை திறன் கொண்டது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும். இந்நிலையில், இந்த ரயில் வேறொரு இன்ஜினில் இணைக்கப்பட்டு, சென்னையில் இருந்து ஹரியானாவுக்கு நேற்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து, ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது, ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, பல்வேறு கட்ட சோதனை நடத்தப்படும். சோதனை இறுதி செய்த பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் பெறப்படும். பிறகு, ஹரியானா மாநிலம் சோனிபேட் – ஜிந்த் இடையே சில வாரங்களுக்கு வெறும் ரயில் மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இயக்கம், பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்த பிறகு, பயணிகளின் சேவைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐ.சி.எஃப்வில் தயாரிப்பு.. சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணம்!

ஹைட்ரஜன் ரயில் என்பது, இயற்கையை மாசுப்படுத்தாமல் இயங்கும் ஒரு சுத்தமான, பசுமையான போக்குவரத்து வகையாக உலக நாடுகளில் பரந்து வளர்ந்து வருகிறது. இது மிதமான காற்று வெளியீடு, குறைந்த சத்தம் மற்றும் நீடித்த சக்தியை வழங்குவதால், எதிர்காலத்தின் சுத்தமான போக்குவரத் தீர்வாகக் கருதப்படுகிறது.ஹைட்ரஜன் ரயில்களில் ஃப்யூஎல் செல் (Fuel Cell) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இது ஹைட்ரஜன் வாயுவையும் ஆக்ஸிஜனை இணைத்து, மின் சக்தியாக மாற்றுகிறது.அந்த மின்சக்தி ரயிலின் மோட்டாரை இயக்கி பயணத்தை நடத்துகிறது.இதனால் மாற்றுப் பயன்களாக நீர் (H₂O) மற்றும் வெப்பம் மட்டும் வெளியேறும்.ஜெர்மனி தான் முதலில் ஹைட்ரஜன் ரயில்களை வழிநடத்தத் தொடங்கிய நாடாகும்.2018ல் Coradia iLint என்ற ரயிலை அறிமுகப்படுத்தியது.இந்திய ரயில்வே, 2030க்கு முன் net-zero carbon emission இலக்கை நோக்கி முன்னேறுகிறது.வாரணாசியில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை முறையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. Hydrogen for Heritage" எனும் திட்டத்தின் கீழ், பாரம்பரிய இடங்களில் சுற்றுச்சூழலுக்கு இனிய ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget