மேலும் அறிய

4.65 லட்சம் விபத்துகள்.. 1.71 லட்சம் மரணங்கள் - ஒரே ஆண்டில் இந்தியாவில் இப்படியொரு சோகமா?

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு மட்டும் 1.71 லட்சம் உயிரிழப்புகள் சாலை விபத்துகளால் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் சாலை தரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதேபோல, இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அதிகரித்து வருகிறது. அதேசமயம். வாகனங்கள் விபத்தில் சிக்குவதும் வருத்தம் தரும் வகையில் நிகழ்ந்து வருகிறது. 

4.64 லட்சம் விபத்துகள்:

அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டு இந்திய சாலைகளில் நிகழ்ந்த விபத்துக்களின் விவரம்  வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 4 லட்சத்து 64 ஆயிரத்து 029 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 969 ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 100 ஆகும்.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது கடந்த 2022ம் ஆண்டு நிகழ்ந்த 1 லட்சத்து 71 ஆயிரத்து 100-ஐ காட்டிலும் அதிகம் ஆகும். மொத்தம் 1.6 சதவீதம் இந்த உயிரிழப்பு அதிகம் ஆகும். கடந்த 2023ம் ஆண்டில் உயிரிழந்தவர்களில் 15.9 சதவீதம் பேர் எஸ்யூவி. கார் மற்றும் ஜீப் வாகனங்களில் சென்றவர்கள். எண்ணிக்கையாக 27 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி பாதசாரிகள் மட்டும் 14.3 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 776 ஆகும். 

அதிவேகமே காரணம்:

இந்த விபத்துகளில் 58.6 சதவீத விபத்துகளுக்கு அதிவேமாக சென்றதே காரணம் ஆகும். இந்த அதிவேகத்தால் மட்டும் 1 லட்சத்து ஆயிரத்து 841 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், 23.6 சதவீதம் உயிரிழப்புகளுக்கு ஓட்டுநரின் அலட்சியமே காரணமாக அமைந்துள்ளது. அதாவது, 41 ஆயிரத்து 35 உயிரிழப்புகள் ஓட்டுநரின் அலட்சியத்தால் அரங்கேறியுள்ளது. 

தமிழ்நாட்டில் இரு சக்கர வாகன விபத்து:

மேலும், கடந்த 2023ம் ஆண்டில் மொத்தம் 45.8 சதவீத சாலை விபத்து மரணங்கள்  இரு சக்கர வாகன விபத்தால் அரங்கேறியுள்ளது. அதாவது, இரு சக்கர வாகன விபத்தால் மட்டும் 79 ஆயிரத்து 533 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 14.5 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது இரு சக்கர வாகன விபத்தில் கடந்த 2023ம் ஆண்டில் 11 ஆயிரத்து 490 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் மட்டும் 10.5 சதவீதம் பேர் அதாவது 8 ஆயிரத்து 370 பேர் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்துக்களில் பெரும்பாலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள் நடக்கிறது. இந்த நேரத்தில் 20.7 சதவீதம் விபத்து நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு விபத்து நடக்கும் மாநிலங்களில் உத்தரபிரதேசத்தில் 12 சதவீதம் விபத்து நடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 10 சதவீதம் விபத்து அரங்கேறியுள்ளது. மகாராஷ்ட்ராவில் 9 சதவீதம் விபத்து நடந்துள்ளது. கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்திலும் 7 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 2023ம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்து மரணங்களில் 35 சதவீதமும், மாநில நெடுஞ்சாலைகளில் 23 சதவீதமும் நடந்துள்ளது.

விபத்துக்களைத் தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் நெடுஞ்சாலைகளில் ஏராளமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால், சில ஓட்டுனர்களின் அலட்சியம், வாகனங்களின் குறைபாடு, பாதசாரிகள் சிக்கல் என பல காரணங்களால் இந்த விபத்துக்கள் அரங்கேறுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget