மேலும் அறிய

Independence Day 2022: ”அடுத்த 25 வருடங்களுக்கு இவைதான்” : நாட்டு மக்களுக்கு 5 உறுதிமொழிகளை பட்டியலிட்ட பிரதமர்

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் கொடி ஏற்றிவிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திர தினம் கிடைத்தது. இன்று உடன் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. அசாதி கா அமிர்த் மஹோத்சவ் என்ற பெயரில் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி வந்தது. 

இந்நிலையில் இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின்னர் அவர் முப்படையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், “நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததற்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. 75 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நம் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கோடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாள். இன்று புதிய பாதையில் புதிய உறுதியுடன் நாம் பயணத்தை தொடர வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நாம் அனைவரும் நன்றி கடன்பட்டிருக்கிறோம். நாட்டிலுள்ள பெண்களின் சக்தியை பார்த்து நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். குறிப்பாக ராணி லக்‌ஷ்மிபாய், வேலு நாச்சியார் போன்றவர்களின் பங்களிப்பை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் தாய் நாடாக இந்தியா சிறந்து விளங்கி வருகிறது. இந்த 75 ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு எதிராக சவால் எழுந்தாலும் அதை நாம் சிறப்பாக கையாண்டு ஜனநாயகத்தை போற்றி காப்பாற்றி வருகிறோம். நாட்டின் சுந்திரத்திற்காக மக்கள் அனைவரும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர். குறிப்பாக பழங்குடியின மக்கள் மற்றும் அவர்களின் தலைவர்களான பிர்சா முண்டா,கோவிந்த் குரு உள்ளிட்ட பலரும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர்.

நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த போது பலரும் நம்முடைய வளர்ச்சி தொடர்பாக கேள்வியை எழுப்பினர். ஆனால் அவர்களுக்கு நம்முடைய நாடு வித்தியாசமான ஒன்று என்று அவர்களுக்கு தெரியாது. மேலும் இந்த மண் புனிதமான மண் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இன்று 75வது ஆண்டில் இருக்கும் நாம் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமாக செயல்பட்டு முன்னேற வேண்டும். சுதந்திரம் அடைந்த 100வது ஆண்டிற்குள் நம்முடைய சுதந்திர போராட்ட தியாகிகள் நினைத்தை நாம் அடைய வேண்டும்.

அடுத்த 25 ஆண்டுகளில் நாம் 5 முக்கிய உறுதி மொழியை எடுக்க வேண்டும். அதாவது விஷிஷ்த் பாரத், நம்முடைய ஒற்றுமை, நம்முடைய கடமையை சரியாக செய்தல் உள்ளிட்டவற்றை எடுக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிகாக இளைஞர்கள் நிச்சயம் பாடுபட வேண்டும். நாம் இந்தியாவின் வளர்ச்சியுடன் ஒட்டு மொத்த மனித குளத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். அது தான் நம்முடைய பலம் ” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க:75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget