மேலும் அறிய

இடைத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய பாஜக...கோட்டையை பறி கொடுத்த அகிலேஷ்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் திறக்கப்பட்டதையடுத்து வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.

டெல்லி மற்றும் ஐந்து மாநிலங்களில் உள்ள மூன்று மக்களவை மற்றும் ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

உத்தரப் பிரதேசம் ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கன்ஷ்யாம் லோதி 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அசாம்கார் தொகுதியிலும் பாஜக வேட்பாளர் தினேஷ் லால் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்தியர யாதவை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

திரிபுரா மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் பாஜக மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றது. பர்தோவாலி தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் திரிபுரா முதலமைச்சர் மாணிக் சஹா வெற்றிபெற்றுள்ளார்.

டெல்லி ராஜிந்தர் நகர் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் துர்கேஷ் பதக் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சட்டா மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, ராஜிந்தர் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ஆம் ஆத்மி கட்சியின் துர்கேஷ் பதக் 40,319 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் ராஜேஷ் பாட்டியா 28,851 வாக்குகளையும் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் பிரேம் லதாவால் 2014 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் பந்து திர்கி ஊழல் வழக்கில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 

அவரின் மகளான ஷில்பி நேஹா டிர்கியை ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி பொது வேட்பாளராக நிறுத்தியது. பாஜக சார்பாக முன்னாள் எம்எல்ஏ கங்கோத்ரி குஜூர் அந்த தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். ஜார்க்கண்ட் இடைத்தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் தேவ் குமார் தானும் போட்டியிட்டார். கடும் போட்டிக்கு மத்தியில், மந்தர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பி வெற்றி பெற்றார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொழில்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி காலமானதையடுத்து, ஆந்திராவில் காலியாக இருந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அவரது தம்பி விக்ரம் ரெட்டி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget