11 AM Headlines: பிரதமர் மோடியை சந்திக்கும் ஸ்டாலின், பேஜர்கள் வெடித்து 3000 பேர் காயம் - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகளை வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
பிரதமர் மோடியை வரும் 20ம் தேதி, முதலமைச்சர் ஸ்டால்ன் டெல்லியில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, சர்வ சிக்ஷா அபியான், மெட்ரொ ரயில் திட்டம் போன்றவற்றிற்கான, நிதியை தமிழகத்திற்கு விடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தனியார் பேருந்துகள், ஆட்டோ, டெம்போக்கள் ஆகியவை இயங்காத நிலையில், திரையரங்குகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் இயங்காததால் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் அவதி.
நம்பிக்கை அளிக்கிறார் விஜய்
சமூகநீதி பார்வையுடன் அரசியல் களத்தில் விஜய் அடியெடுத்து வைப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது என, பெரியார் திடலுக்குச் சென்று தந்தை பெரியாருக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டர்:
சென்னை வியாசர்பாடியில் ரவுடி காக்கா தோப்பு பாலஜியை, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். பிடிக்க முயன்றபோது தாக்கியதால் துப்பாக்கிச் சூடு என தகவல். அவர் மேல் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு திட்டம்
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் வட மாவட்ட பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு எத்தனை நடை பேருந்து இயக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்கப்படும் என தகவல்
ஜம்மு-காஷ்மீரில் விறுவிறு வாக்குப்பதிவு
பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு & காஷ்மீரில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதில் முதற்கட்டமாக இன்று 24 தொகுதிகளில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மோடியை சந்திக்கிறார் பிரதமர் மோடி:
பிரதமர் மோடி அடுத்தவாரம் தன்னை சந்திக்க வரவுள்ளதாக, அமெரிக்கா முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டிரம்ப் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையின் போது, அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
மருத்துவ படிப்பை பாதியில் கைவிட்டால், 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கில் இடம்பெற்றவர்கள், வரும் 26ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். விருப்பமில்லதோர் குற்ப்பிட்ட காலக்கெடுவுக்குள் கல்லூரியில் சேர்ந்தாலும் அபராதமின்றி வெளியேறலாம்.
லெபனானில் பேஜர் வெடித்து 9 பேர் பலி
லெபனானில் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழப்பு. சுமார் 3000 பேர் காயமடைந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் என லெபனான் குற்றச்சாட்டு
அடுத்த சீசனிலும் தோனி விளையாட வேண்டும் - ரெய்னா
தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும், ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் விரும்புகின்றனர். என்னுடைய ஆசையும் அதுதான் - ரெய்னா