Hyderabad: அதிர்ச்சி... சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி... வாடிக்கையாளருக்கு இழப்பீடு தர உத்தரவு...!
ஹைதராபாத்தில் சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததாக கொடுத்த புகாரில் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hydrabad : ஹைதராபாத்தில் சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததாக கொடுத்த புகாரில் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி
ஹைதரபாத் அமீர்பேட்டையில் உள்ள பிரபல உணவகத்தில் ஐடி கம்பெணியில் வேலை செய்யும் அருண் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி சிக்கன் பிரியாணி ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அப்போது, ஆர்டர் செய்த பிரியாணி தனது வேலை செய்யும் அலுவலகத்திற்கு வந்தது. பின்னர், ஆர்டர் செய்யப்பட்ட சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.
மேலும், இதுபற்றி சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அழைப்பு விடுத்தார். அப்போது இதற்கு உணவக மேலாளர் மன்னிப்பு கோரியதுடன், ஆர்டர் செய்த பிரியாணி தொகையான 240 ரூபாயை வாடிக்கையாளர் அருணிடம் வழங்கினர். ஆனால் இந்த பிரச்சனை இதோடு முடியவில்லை. இதனை அடுத்து, வாடிக்கையாளர் அருண் நீதிமன்றத்தை நாடினார். தனக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி ஹைதரபாத் நுகர்வோர் ஆணையத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார். இந்த சம்பவம் பல நாட்களாக நீடித்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
ரூ.20 ஆயிரம் அபராதம்
ஆனால் சம்பந்தப்பட்ட உணவகம், பிரியாணியில் கரப்பான் பூச்சி உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், உணவகம் சுகாதாரத்தை கடைபிடிக்காததை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட உணவகம் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. வாடிக்கையாளருக்கு உணவு வழங்குவதில் அலட்சியமாக செயல்பட்டதாக நீதிமன்றம் கூறியது.
இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் அபராத தொகையாக ரூ.20 ஆயிரத்தை வாடிக்கையாளர் அருணுக்கு வழங்க உத்தரவிட்டது. மேலும், இந்த தொகையை 45 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று நடப்பது இதுமுறையல்ல.
இதுபோன்ற பல பகுதிகளில் சாப்பிடும் உணவுகளில் கரப்பான் பூச்சி உள்ளிட்டவற்றை கிடப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஹைதரபாத்தில் சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்ததாக கொடுத்த புகாரில் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க