"குடி"மகன்களுக்கு குஷி..! 10 நிமிடத்திலே வீட்டிற்கே தேடி வரும் சரக்கு...! ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புதிய யுக்தி...!
கொல்கத்தாவில் மதுபானங்களை 10 நிமிடத்திலே வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி பங்கில் மது விற்பனை என்பது தவிர்க்க முடியாத முக்கிய இடத்தில் உள்ளது. பல மாநில அரசுகளே மதுவிற்பனையை அதிகாரப்பூர்வமாக நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் சில மாநிலங்களில் மதுபானங்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருவதும், அந்த பாட்டில்களை வீட்டிற்கே டெலிவரி செய்வதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவிலும் தற்போது ஆர்டர் செய்தால் வீட்டிற்கே மதுபானங்களை கொண்டு வரும் முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மதுபிரியர்கள் ஆர்டர் செய்த 10 நிமிடங்களிலே மது பானங்களை ஆர்டர் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பூஜீ என்ற நிறுவனம் 10 நிமிடத்திலே மதுபானம் ஆர்டர் செய்யும் முறையை செயல்படுத்த உள்ளது.
10 நிமிடத்திலே மதுபானங்களை வீட்டிற்கு ஆர்டர் செய்யும் முறைக்கு மேற்கு வங்க கலால்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆர்டர் செய்யும் நபருக்கு அருகாமையில் எந்த மதுக்கடை உள்ளதோ அந்த கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வதாக பூஜீ நிறுவனம் கூறியுள்ளது. இந்த முறையில் ஆர்டர் செய்யும் நபர்களின் வயது உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னரே அவருக்கு மதுபானம் ஆர்டர் விநியோகம் செய்யப்படுவதாக பூஜீ நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
நாட்டில் ஏற்கனவே வீட்டிற்கே சென்று மதுபானங்களை ஆர்டர் செய்யும் பல நிறுவனங்கள் இருந்தாலும் 10 நிமிடத்தில் மதுபானத்தை டெலிவரி செய்யும் முதல் நிறுவனம் பூஜீ நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் மதுவால் சீரழிந்துள்ள சூழலில், தற்போது வீட்டிற்கே தேடிவந்து மதுபானங்களை விற்பனை செய்வதும்., 10 நிமிடங்களில் மதுபானங்களை டெலிவரி செய்வதும் போன்ற செயல்களால் இளைய சமுதாயத்திற்கு மோசமான பாதிப்பு ஏற்படும் என்று கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க : Bus - Classroom : ”வேற லெவல் போங்க” : ஓடி ஓடி உழைத்த அரசுப்பேருந்துகளை நவீன வகுப்பறையாக மாற்றிய அரசு..
மேலும் படிக்க : Kashmir: அப்போ ஆசிரியர்... இப்போ வங்கி ஊழியர்.. ஜம்மு காஷ்மீரில் அரங்கேறும் தீவிரவாதிகள் அட்டூழியம்!
மேலும் படிக்க : Hardik Patel Joins BJP: ”எளிய போர்வீரனாக செயல்படுவேன்” : பாஜகவில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்