Watch Video: ஓடும் மெட்ரோவில் நஸ்ரியா பாடலுக்கு ரீல்ஸ்.. போலீஸ் புகாரில் சிக்கிய இளம்பெண்!
மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் நடனமாடுவது தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. மெட்ரோ ரயில்களில் பொதுவாக சில கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும் மெட்ரோ ரயில் நிலையங்களில் சில இளைஞர்கள் கட்டுப்பாடுகளை மீறி வீடியோ எடுப்பது, நடனமாடுவது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்தவகையில் அந்த மெட்ரோ ரயிலில் பெண் ஒருவர் நடனம் ஆடி வீடியோ இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ ஒன்றை எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் சேவையில் இது தொடர்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இளம் பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் நஸ்ரியா - நானி நடித்த தெலுங்கு பட பாட்டு ஒன்றுக்கு நடனமாடுகிறார். இதைப் பதிவிட்டு இது போன்று மெட்ரோ ரயில்களில் நடக்க தொடங்கியது என்ற கேள்வியையும் ஒருவர் எழுப்பியுள்ளார்.
💃 Dance On Hyderabad Metro 🚄
— Hi Hyderabad (@HiHyderabad) July 20, 2022
When did this happen??? pic.twitter.com/ZilPdia9fx
இந்த வீடியோ பலர் மத்தியில் வேகமாக வைரலானது. இதைத் தொடர்ந்து இந்த வீடியோ தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்பட்டு அப்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹைதராபாத் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻 pic.twitter.com/DC56RS8FFr
— “𝐌.𝐑” راجيش (@MR1TRS) July 20, 2022
இந்தப் பெண்ணின் வீடியோ தொடர்பாக சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று இந்த வீடியோவிற்கு ஒருவர் பதில் பதிவாக இந்தப் பெண் மெட்ரோ ரயில் நிலையத்திலும் நடனமாடுவது தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்