Sanchar Saathi Portal: செல்போன் தொலைந்துபோனால் கண்டுபிடிப்பது இனி ஈஸி... அமலுக்கு வந்த புதிய வசதி... எப்படி தெரியுமா...?
காணாமல் போன மற்றும் திருடுப்போன செல்போன்களை எளிதில் கண்டறியும் வகையில் மத்திய அரசு சார்பில் புதிய வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.
Sanchar Saathi Portal : காணாமல் போன மற்றும் திருடுப்போன செல்போன்களை எளிதில் கண்டறியும் வகையில் மத்திய அரசு சார்பில் புதிய வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.
செல்போன்
வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செல்போனால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அதற்கு ஈடாக பல குற்றச் சம்பங்களுக்கு ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அதன்படி, ஆன்லைன் பணமோசடி, செல்போன் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக செல்போன் திருட்டு சம்பங்களும் அல்லது நாம் செல்போன் தொலைத்து விடுவதும் அன்றாட வாழ்க்கையில் நடக்கக் கூடிய ஒன்று தான்.
புதிய வசதி
அந்த வகையில், தற்போது காணாமல் போன மற்றும் திருடுப்போன செல்போன்களை எளிதில் கண்டறியும் வகையில் மத்திய அரசு சார்பில் புதிய வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமலுக்கு வந்தது. சஞ்சார் சாத்தி (Sancharsaathi) என்ற இணையதளம் வசதியை தகவல் தொடர்புத்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். இதன் மூலம் செல்போன்கள் அதிக அளவில் பாதுகாக்கப்படும்.
Check mobile connections issued using your KYC details.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) May 16, 2023
Visit: https://t.co/favxist38Z
Report unknown connections, if any to block. pic.twitter.com/UcFegtgVwV
பழைய மற்றும் புதிய செல்போன்களை வாங்கும்போது இந்த வலைத்தளம் மூலம் உண்மைத் தன்மைய தெரிந்து கொள்ள முடியும். மேலும், ஒரு செல்போன் தொலைந்து போனாலோ, திருடுப் போனாலோ அந்த வலைத்தளம் மூலம் அதன் செயல்பாட்டை உடனடியாக நம்மால் நிறுத்த முடியும்.
எப்படி பயன்படுத்துவது?
- முதலில் சஞ்சார் சாத்தி (Sancharsaathi) https://www.sancharsaathi.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- முகப்பு பக்கத்தில் செல்போன் எண், ஐஎம்இஐ (IMEI) எண், செல்போன் பிராண்ட் பெயர் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
- பின்னர், செல்போன் தொலைந்த இடம்,தேதி போன்ற தகவல்களையும் உள்ளிட வேண்டும்.
- மேலும், உங்களின் பெயர், ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
- இதனை அடுத்து, Apply என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் தொலைந்துபோன செல்போன் முடக்கப்படும். மேலும், அந்த செல்போனை யாரும் பயன்படுத்த முடியாது.
குறிப்பாக IMEI எனும் 15 இலக்க எண் ஒவ்வொரு போனுக்கும் விற்பனை செய்யும்போது நிரந்தரமாக செல்போனில் இணைத்து வழங்கப்படும். இந்தியாவில் செல்போனை விற்பனை செய்ய IMEI எண் அவசியம். இந்த எண்ணை வைத்துதான் உங்கள் காணாமல் போன செல்போனை முடக்கவும், மீண்டும் கண்பிடிக்கவும் உதவும் வகையில் தான் மத்திய அரசு சார்பில் புதிய வசதியை அமல்படுத்தியுள்ளது.