Watch Video : நீங்க பயன்படுத்தும் தேயிலையில் கலப்படம் இருக்கா? சுத்தமானதா? இதோ வீடியோ விளக்கம்..
தினமும் காலையில் தேநீர் (Tea) அல்லது காபியோடுதான் பெரும்பாலானோர் வீடுகளில் நாளே தொடங்குவோம். ஆனால் அது எந்தக் கலப்படமும் இல்லாத சுத்தமான தேநீர்தானா?
தினமும் காலையில் தேநீர் (Tea) அல்லது காபியோடுதான் பெரும்பாலோர் வீடுகளில் நாளே தொடங்குவோம். நீங்கள் பயன்படுத்தும் தேயிலை, கலப்படம் வாய்ந்ததா? அல்லது கலப்படமற்ற நிஜ தேயிலையா? என்பதை எப்படி கண்டறிவீர்கள்? FSSAI அளித்திருக்கும் தெளிவான இந்த வீடியோவைப் பார்த்து, உங்கள் தேநீர் கலப்படம் வாய்ந்ததா இல்லையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
Are your tea leaves adulterated with exhausted tea leaves? Watch the video to know more! #NoToAdulteration #FoodSafety #FSSAI pic.twitter.com/dmEadU0pWz
— FSSAI (@fssaiindia) September 15, 2024
FSSAI என்னும் தரநிலை அமைப்பு, தேநீர் கலப்படமற்றதா, கலப்படம் வாய்ந்ததாக சோதித்துப் பார்ப்பதற்கான, வழிமுறைகளை வெளியிட்டுள்ளதா? ஃபில்டர் பேப்பர் எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சம் தேயிலைகளை வைத்துவிட்டு, சொட்டு சொட்டாக தண்ணீரை அதன் வழியாக விடவும். ஒருவேளை உங்கள் தேயிலைகள் கலப்படம் வாய்ந்ததாக இருந்தால், நீங்கள் வைத்த ஃபில்டர் பேப்பரில், கருமையும், பழுப்பும் கொண்ட நிறத்தின் தடத்தை உங்களால் பார்க்கமுடியும். தரமான தேயிலையாக இருந்தால், எந்த விதமான நிறத்தையும் உங்களால் அந்த ஃபில்டர் பேப்பரில் பார்க்கமுடியாது