HP Election 2022: இமாச்சலப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு நிறைவு...! இறுதி நிலவரம் என்ன..?
மாலை 5 மணி நிலவரப்படி, அம்மாநிலத்தில் மொத்தம் 65.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது. தாஷிகாங்கில் உள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியில் 98.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மலைப்பிரதேசமான இமாச்சலப் பிரதேசத்தின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அம்மாநில மக்கள் இன்று ஜனநாயகக் கடமை ஆற்றினர்.
இமாச்சல பிரதேசம் :
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.12) ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி, அம்மாநிலத்தில் மொத்தம் 65.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பகல் 1 மணி நிலவரப்படி 37.19% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னதாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Himachal Pradesh | Voters on their way to polling station Chasak Bhatori in Pangi tehsil of Chamba district#AssemblyPolls2022 pic.twitter.com/xaywyAzKRz
— Kashmir Press (@Kashmeranews) November 12, 2022
அம்மாநிலத்தின் தாஷிகாங்கில் உள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியில் 52 வாக்காளர்களில் 51 பேர் வாக்களித்துள்ளனர். சுமார் 98.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு நிலவரம் :
அதிகபட்சமாக சிர்மூர் மாவட்டத்தில் 41.89 விழுக்காடு வாக்குகளும், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூரின் சொந்த மாவட்டமான மண்டியில் 41.17 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதிக உயரமுள்ள மாவட்டமான லாஹவுல் மற்றும் ஸ்பிட்டியில் 21.95 விழுக்காடு குறைவாகவும், சம்பாவில் மதியம் 1 மணி வரை 28.35 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Voting in Himachal Pradesh Assembly elections concludes.
— ANI (@ANI) November 12, 2022
EVMs and VVPATs being sealed and secured at polling booths in Dharamshala and Shimla
Counting of votes on December 8 pic.twitter.com/PF2wWWhgtD
இன்று பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 8ம் தேதி குஜராத் தேர்தல் வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்படும்.
இன்றைய தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியியிட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் சுமார் 11,000க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் 75.57 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. 2017 தேர்தலில் பாஜக 68 இடங்களில் 44 இடங்களை வென்றது, காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.