(Source: ECI/ABP News/ABP Majha)
Himachal Pradesh: ஹிமாச்சலில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்.. அதிரடி காட்டிய சபாநாயகர்..
ஹிமாச்சல் பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகரின் அறையில் அநாகரீகமாக நடந்துக்கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை தவிர ஒரு காங்கிரஸ் அமைச்சரும் ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஹிமாச்சல் அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது.
15 BJP MLAs including LoP Jairam Thakur, Vipin Singh Parmar, Randheer Sharma, Lokender Kumar, Vinod Kumar, Hans Raj, Janak Raj, Balbir Verma, Trilok Jamwal, Surender Shori, Deep Raj, Puran Thakur, Inder Singh Gandhi, Dileep Thakur and Inder Singh Gandhi, have been expelled by the…
— ANI (@ANI) February 28, 2024
பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஜெயராம் தாக்கூர், விபின் சிங் பார்மர், ரந்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால், சுரேந்தர் ஷோரி, தீப் ராஜ், பூரன் தாக்கூர், திலீப் தாக்குர் மற்றும் இந்தர் சிங் காந்தி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
#WATCH | Shimla | Congress MLA Vikramaditya Singh holds a press conference following the Himachal Pradesh Rajya Sabha election result.
— ANI (@ANI) February 28, 2024
He says, "I have always respected the leadership and the CM and contributed toward running the government with due discipline. I am not… pic.twitter.com/6wCRPwk5yj
மேலும், காங்கிரஸ் அமைச்சர் ஒருவரும் ராஜினாமா செய்துள்ளார். இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நேற்று கட்சி மாறி வாக்களித்த சூழலில், ராஜ்யசபை சீட் ஒன்று பா.ஜ.க.வின் வசம் சென்றது. இதனால் ஹிமாச்சல அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.