Helicopter Crash Kedarnath: ”என் மகளை பாத்துக்கோங்க..” : கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் கடைசி வார்த்தைகள்..
Helicopter Crash Kedarnath: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி தனது மனைவியிடம் உருக்கமாக கடைசி வார்த்தை இதுதான் என அவரது மனைவி குறிப்பிட்டிருக்கிறார்.
![Helicopter Crash Kedarnath: ”என் மகளை பாத்துக்கோங்க..” : கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் கடைசி வார்த்தைகள்.. Helicopter Crash Kedarnath: helicopter crash last word of helicopter pilot Helicopter Crash Kedarnath: ”என் மகளை பாத்துக்கோங்க..” : கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானியின் கடைசி வார்த்தைகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/19/4dad5ea8def7c55efdc29c506261c8011666152432568571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Helicopter Crash Kedarnath: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி தனது மனைவியிடம் உருக்கமாக கடைசி வார்த்தைகளை அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்வதற்கான ஹெலிகாப்டர் மூலம் ஒரு விமானி உட்பட 6 பேர் செல்லப்பட்டனர். பாட்டாவில் இருந்து கேதார்நாத்துக்கு யாத்ரீகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் நேற்று காலை 11.45க்கு மணிக்கு விபத்துக்குள்ளானது. இந்தி விபத்தில் ஒரு விமானி உட்பட 6 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சுஜாதா, கலா, பிரேம் குமார் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#UPDATE | Six people died in the helicopter crash in Phata, Uttarakhand: Abhinav Kumar, Special Principal Secretary to the Chief Minister pic.twitter.com/pgrasTAHTS
— ANI (@ANI) October 18, 2022
விமானியின் கடைசி பேச்சு:
உத்தரகாண்டில் நேற்று ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தேரி புறநகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கடந்த 15 ஆண்டுகளாக விமானி அனில் சிங் வசித்து வந்தார். அவருக்கு மனைவி ஷிரீன் ஆனந்திதா மற்றும் மகள் ஃபிரோசா சிங் உள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்துக்கு ஒரு நாள் முன்பு விமானி அனில் சிங் தனது மனைவியிடம் கடைசியாக சில வார்த்தைகள் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, " என் மகளை கவனித்துக்கொள், அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. அவளை கவனமாக பார்த்துக்கொள்" என மனைவியுடன் கடைசியாக பேசியுள்ளார்” என பிடிஐயிடம் தொலைபேசியில் தெரிவித்தார் அவரது மனைவி.
केदारनाथ के समीप गरुड़ चट्टी में दुर्भाग्यपूर्ण हेलीकॉप्टर क्रैश में कुछ लोगों के हताहत होने का अत्यंत दु:खद समाचार प्राप्त हुआ है। राहत और बचाव कार्य हेतु SDRF और जिला प्रशासन की टीम घटनास्थल पर पहुंच चुकी है। इस दु:खद घटना के विस्तृत जांच के आदेश दे दिए गए है।
— Pushkar Singh Dhami (@pushkardhami) October 18, 2022
மேலும் இந்த விபத்து தொடர்பாக புலனாய்வுப் பிரிவு மற்றும் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் குழுக்கள் ஆய்வு செய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து உரிய விசாரணை நடத்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாபி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)