மேலும் அறிய

விடாது துரத்தும் ஏழரை.. ஆறே வாரத்தில் 5வது சம்பவம்.. கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து

கேதார்நாத்துக்கு ஆர்யன் ஏவியேஷன் நிறுவனம் இயக்கிய ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த 6 வார காலத்தில் நடக்கும் 5ஆவது ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் இதுவாகும்.

ஆர்யன் ஏவியேஷன் நிறுவனம் கேதார்நாத்துக்கு இயக்கிய பெல் 407 ஹெலிகாப்டர் (பதிவு விடி-பிகேஏ) இன்று (15.06.2025) விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த விமானி, குழந்தை உள்பட 7 பேரும் உயிரிழந்தனர். கடந்த 6 வார காலத்தில் நடக்கும் 5ஆவது ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் இதுவாகும்.

விடாது துரத்தும் ஏழரை:

குப்தகாஷியில் இருந்து காலை 05:10 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர், ஸ்ரீ கேதார்நாத் ஹெலிபேடில் காலை 05:18 மணிக்கு தரையிறங்கியது. அது, மீண்டும் காலை 05:19 மணிக்கு குப்தகாஷிக்கு புறப்பட்டது. ஆனால், அந்த ஹெலிகாப்டர் காலை 05:30–05:45 மணிக்கு இடையில் கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

பள்ளத்தாக்கு நுழைவுப் பகுதியில் மோசமான வானிலை, அதிக மேகமூட்டம் ஆகியவை நிலவியதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, விமான விபத்து புலனாய்வு அலிவலகம் (AAIB-ஏஏஐபி) விரிவான விசாரணை நடத்தி விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து வருகிறது.

ஆறே வாரத்தில் 5வது சம்பவம்:

விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களின் மீட்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி காலை 11:00 மணிக்கு உயர் நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தை நடத்தினார்.

இதில், உத்தரகாண்ட் அரசின் மூத்த அதிகாரிகள், விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர், விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விபத்தை அடுத்து பின்வரும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

  • சார் தாம் யாத்திரைக்கான விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
  • மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் இதேபோன்ற மோசமான வானிலை நிலைமைகளின் கீழ் வான்வழியாக பறந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அந்த இரு விமானிகளின் உரிமங்களும் ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இப்பகுதியில் உள்ள அனைத்து சார்ட்டர், ஷட்டில் ஹெலிகாப்டர் செயல்பாடுகளும் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • வான்வழி சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு அனைத்து நிறுவனங்களுடனும், விமானிகளுடனும் ஆலோசித்து விரிவான ஆய்வை நடத்த உத்தராகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையமான யுசிஏடிஏ-வுக்கு (UCADA) உத்தரவிடப்பட்டுள்ளது.
  • கேதார்நாத் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து ஹெலிகாப்டர் செயல்பாடுகளையும் தீவிரமாக மேற்பார்வையிடவும், யுசிஏடிஏ கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை ஆய்வு செய்யவும், அதிகாரிகளை உடனடியாக நியமிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget