Headlines Today: அடுத்த 5 நாட்களுக்கு மழை.! சென்னையில் நீடிக்கும் குளிர்..! அர்ஜெண்டினா தோல்வி...
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
தமிழகத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக் நீடிக்கப்பட்ட அவகாசத்தில் 61,365 ஏக்கர் கூடுதலாக காப்பீடு. கெடு நீடிப்பு காலத்தில் 30,000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காப்பீடு
மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு 1000 ரூபாய் நிவாரணம், நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்- ஆட்சியர் தகவல்
சென்னையில் அடுத்த சில தினங்களுக்கு குளிர்ந்த வானிலையே நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை நீக்கப்பட்டது, அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர் ஆவடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பணி ஆணைகளை வழங்கினார். வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதே மத்திய அரசின் நோக்கம் என பேச்சு
நூற்றாண்டு போரட்டத்தின் விளைவு தான் இன்று மாணவிகள் பட்டம் பெறும் காட்சி, கல்வியை கைவிடக்கூடாது என ராணி மேரிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சிறந்த இலக்கியங்களுக்காக விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் தமிழக அரசின் கனவு இல்லத்திட்டம். திலகவதி, ராமகிருஷ்ணன், வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் நடப்பாண்டிற்கு தேர்வு. விரும்பும் மாவட்டத்தில் வீடு வழங்கப்படும் என அரசாணை.
திருவள்ளூரில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி, கைதானவரிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்
சேலம் புத்தகத் திருவிழாவில் சிறுதானிய உணவு சமைத்து அசத்திய பெண்கள், சிறப்பாக சமைத்த மூன்று குழுக்களுக்கு உணவுத்துறை சார்பில் பரிசு வழங்கி கௌரவிப்பு.
மதுரை அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் 193 ஹெக்டேர் பல்லுயிர் பாரம்பரிய பசுமை தளமாக அறிவிப்பு, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
இந்தியா
மத்திய அரசின் வேலைவாய்ப்பு விழாவில் புதிதாக 71,000 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி. புதிதாய் பொறுபேற்றவர்கள் சாரதிகளாய் நாட்டை முன்னேற்ற வேண்டும் என பேச்சு.
சபரிமலையில் சுகாதாரத்தை மேம்படுத்த புதிய சபரிமலை திட்டம் அமல், நெகிழி பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாரு பக்தர்களுக்கு தேவஸ்தானம் போர்டு வேண்டுகோள்.
உலகம்
ட்விட்டர் மெட்டாவை தொடர்ந்து ஆட்குறைப்பில் இணைந்த கூகுள், 10,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு
உக்ரைனில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்து எண்ணமில்லை ரஷ்யா திட்டவட்டம். மின் கட்டமைப்புகளை ரஷ்யா தாக்கி வருவதால் குளிர்காலத்தில் 1 கோடி பேர் மின்சாரமின்றி தவிக்கும் நிலை ஏற்படும்
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுகத்தில் பலி எண்ணிக்கை 268 ஆக உயர்வு, 150க்கும் மேற்பட்டோர் மாயம்
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு, அவசர நிலை பிரகடனம்.
விளையாட்டு
ஃபிபா உலகக் கோப்பைத் கால்பந்து போட்டியில் அர்ஜண்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய. வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று சவுதியில் தேசிய விடுமுறை அறிவிப்பு.
மான்செஸ்டர் அணியிலிருந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ விலகல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
ஃபிபா உலகக் கோப்பைத் கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிரான்ஸ்