மேலும் அறிய
Top Headlines Today: தமிழகத்தில் நாளை முதல் மழை.. 6 பேர் விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு.. இன்னும் பல முக்கிய செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னையில் புதுமை திட்டம்: பஸ், மெட்ரோ, ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் - முதலமைச்சர் முக ஸ்டாலின்
- வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது; தமிழ்நாட்டில் நாளை முதல் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழகத்தில் அனுமதியின்றி எங்கும் சிலைகள் வைக்கக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- பணி நியமனத்தில் முறைகேடு விவகாரம்; பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 254 பேர் டிஸ்மிஸ் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் ஆறுதல் - ரூ 10 லட்சம் நிதி உதவி வீடு ஒதுக்கீடு ஆணை
- 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் தேனி விஐபி சிக்குகிறார்; தாசில்தார் கைதை தொடர்ந்து வேகமெடுக்கிறது சிபிசிஐடி விசாரணை
- இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற முறைசாரா கல்வித் திட்டங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழுவின் தமிழ்நாடு குழு தெரிவித்துள்ளது.
- நாளை (நவம்பர் 19ஆம் தேதி ) தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- சென்னை காவல்துறை பதிவுசெய்த 4 வழக்குகளில், சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்
இந்தியா:
- மேற்கு வங்க ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த போஸை நியமித்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
- ராஜீவ் காந்தி கொலை வழக்கு : 6 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு - மத்திய அரசு திடீர் நடவடிக்கை
- இந்திய விமானப் படையில் நிரந்தர கமிஷினில் சேர்வதற்காக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் போராடி வந்த 32 பெண் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- ஞானவாபி மசூதியை இந்து கடவுளிடம் ஒப்படைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு: மசூதி கமிட்டியின் மனு தள்ளுபடி
- மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்
- அகில இந்திய வங்கி சம்மேளனம் சார்பில் வங்கி ஊழியர்கள் வரும் 19 ம் தேதி (நாளை) வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
- நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உலகம்:
- ட்விட்டர், பேஸ்புக்கை தொடர்ந்து அமேசான் ஊழியர்கள் 10,000 பேர் பணி நீக்கம்
- ஒரு கோடிக்கும் அதிகமான உக்ரேனியர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை
- பாலஸ்தீன் காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - உடல் கருகி 21 பேர் பலி
- சீனாவில் ஒரே நாளில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி
- அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் முத்தரப்பு மாநாட்டுக்கு பதிலடி; வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
விளையாட்டு:
- இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி : வெலிங்டனில் இன்று நடக்கிறது
- பிபா தலைவராக கியானி இன்பான்டினோ போட்டியின்றி 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியின் வீரர் அலிஷன் ஷராஃபு பந்தை பளபளப்பாக்க உமிழ்நீரை பயன்படுத்தியதை அடுத்து, 5 பெனால்டி ரன்கள் நேபாள அணிக்கு வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
சென்னை
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion