மேலும் அறிய
Advertisement
Morning Wrap | 6.7.2021- இன்றைய தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
- தமிழ்நாட்டில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பிற்கு 54 பேர் பலி.
- மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு 214 பேர் புதியதாக நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 436 பேருக்கு கொரோனா
- கோவையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு
- நடப்பாண்டில் டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்
- உள்நாட்டு விமான சேவையில் 65 சதவீத பயணிகள் வரை ஏற்றிச்செல்ல அனுமதி
- டெல்லி –ஹரியானாவில் நில அதிர்வு – வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
- மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ஓராண்டுக்கு தகுதிநீக்கம்.
- சி.பி.எஸ்.இ. தேர்வு முறையில் புதிய மாற்றம் – நடப்பு கல்வியாண்டு முதல் அமல்
- மத்திய அமைச்சரவை ஓரிரு நாட்களில் மாற்றப்பட வாய்ப்பு – 24 பேர் புதியதாக அமைச்சர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு
- இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற சுய வேலைவாய்ப்புத் திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
- வரும் 9-ந் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை
- மே மாதம் முதல் தற்போது வரை சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக 16 பேர் கைது
- ஆபாசமாக பேசிய யூ டியூபர் பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி
- ஓய்வு பெற்ற பிறகும் லஞ்சம் பெற்ற ஐ.சி.எப். பொறியாளர் கைது – 2 கோடியே 75 லட்சம் மற்றும் 23 கிலோ தங்கம் பறிமுதல்
- தமிழக அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் – காவிரி விவகாரம், மேகதாது அணை குறித்து நேரில் விவாதிக்க முடிவு
- ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கு எதிராக நடிகர் கார்த்தி முதல்வரிடம் நேரில் மனு
- நாடு முழுவதும் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.
- கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 39 ஆயிரத்து 796 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
- கடந்த 24 மணி நேரத்தில் 723 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பு
- இந்தியா முழுவதும் நேற்று மட்டும் 42 ஆயிரத்து 352 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தனர்.
- பிரம்மபுத்திரா ஆற்றின் நீர்மட்டம் உயர்வு – அசாம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
- டுவிட்டர் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றவில்லை – டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion