மேலும் அறிய
Advertisement
இன்று காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- ப்பான் தலைநகர் டோக்கியாவில் கோலாகலமாக தொடங்கியது ஒலிம்பிக்
- குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி கேப்டன் மன்தீப் சிங் கொடியேந்தி அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினர்
- வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்படும் – தமிழக அரசு
- இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீ்ர்வு காண தனி வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் – முதல்வர்
- பத்திரப்பதிவுத்துறை சேவையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் – ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு
- சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை இணைய வழியில் பெறுவதற்கு நடவடிக்கை – தமிழக அரசு
- நீலகிரி மாவட்டம் கூடலூரில் தொடர் கனமழை – பல இடங்களில் வெள்ளம், மண்சரிவு
- கையில் வாரண்ட் இல்லாவிட்டால் காவலர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்க கூடாது – டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
- கொரோனா அச்சுறுத்தலால் நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் ஏதும் இல்லை – மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில்
- ராஜ்குந்த்ரா ஆபாச படம் தயாரித்த விவகாரம் : நடிகை ஷில்பா ஷெட்டியில் 6 மணிநேரம் போலீசார் விசாரணை
- உள்நாட்டு விமான சேவை மேம்படுத்தப்படும்: மேலும், உள்நாட்டு விமான நிலையங்களை இணைக்கவும் திட்டம் – பிரதமர் மோடி தகவல்
- ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- தொடர் மழையால் விரைவாக நிரம்பும் பவானிசாகர் அணை – உபரிநீர் திறக்கும் அபாயம் இருப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- கொரோனா வைரசுக்கு எதிரான அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கு பயன்படுத்த ஐரோப்பிய மருந்து நிறுவனம் பரிந்துரை
- ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிப்பு
- தெலுங்கானாவில் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
- பிரதமர் மோடியுடன் ஐ.நா. பொதுச்சபைத் தலைவர் அப்துல்லா ஷாகிப் நேரில் சந்திப்பு
- ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் நிபந்தனை – ஆப்கான் அதிபர் பதவி விலக வலியுறுத்தல்
- திபெத்திற்கு திடீரென வருகை புரிந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் – எல்லையோர பகுதிகளின் வளர்ச்சியை காண வந்ததாக சீனா விளக்கம்
- இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி – 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது
- தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்பு
- இது போன்ற மேலும் பல முக்கியத் தலைப்புச் செய்திகளை அறிந்து கொள்ள ஏபிபி நாடு இணைதளத்தை தொடர்ந்து பாருங்கள். அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion