Clean Milk : மாடுகள் அழுக்கா பால் தருதா? : தலைநகரில் ஒரு நூதன வழக்கு..
தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு துணைநிலை ஆளுநருக்கு "ஆலோசனை" வழங்க எந்த சட்டமும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று கூறியது.
தில்லியின் லெப்டினன்ட் கவர்னர் மற்றும் நகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு இங்குள்ள குடிமக்களுக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான பால் வழங்கப்படுவதை உறுதி செய்ய "ஆலோசனை" வழங்குவதற்கான பொதுநல வழக்கை விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு துணைநிலை ஆளுநருக்கு "ஆலோசனை" வழங்க எந்த சட்டமும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று கூறியது.
"உயர்நீதிமன்றம் எந்த அதிகார வரம்பில் துணைநிலை ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முடியும்? ஆளுநருக்கு ஆலோசனை வழங்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் எந்த விதியையும் நான் அரசியலமைப்பில் பார்க்கவில்லை" என்று நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மனுதாரரான வழக்கறிஞரிடம் கூறியது.
செய்தி அறிக்கைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட மனுதாரரின் வழக்கு, "சாலையில் கால்நடைகள் இறந்து கொண்டிருக்கின்றன" என்றும், "பிளாஸ்டிக்கை அவை உணவாக உட்கொள்கின்றன்" என்றும் வலியுறுத்தியிருந்தது.
மேலும் அந்த மனுவில், “கால்நடைகள் புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட மற்றும் பரிதாபகரமான நிலை டெல்லிவாசிகளின் உடல்நிலையை பாதிக்கிறது” என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் தனது மனுவில் உள்ள பிரச்சினை அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் ஜீவராசிகள் வாழ்வதற்கான உரிமையைப் பற்றியது என்றும், அதன் "ஆலோசனை அதிகார வரம்பிற்கு" கீழ் துணை நிலை ஆளுநருக்கு ஆலோசனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறினார்.
அவர் தனது மனுவில், கால்நடைகள் "அசுத்தமான உணவு" மற்றும் வடிகால்களில் இருந்து அழுக்கு கழிவுநீரை உட்கொள்கின்றன என்றும் கூறினார்.
இதை படித்த நீதிமன்றம் "நாங்கள் அறிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குவதில்லை. எங்கள் வரம்புகள் எங்களுக்குத் தெரியும்" என்று பதிலளித்தது.
மனுதாரர் தொடர்ச்சியாக வாதம் செய்து வந்த நிலையில்"கடுமையான தொகையை" விதிக்க நீதிமன்றம் விருப்பம் தெரிவித்ததை அடுத்து, மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றார்.
துணைநிலை ஆளுநர் கடந்த வாரம் டெல்லியின் போக்குவரத்து விதிமுறைகளை நவீனப்படுத்துவது தொடர்பாக கடந்தவாரம் நிகழ்வு ஒன்றில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஜி20 மாநாடு தலைநகரில் நடக்கவிருப்பதை அடுத்து அதற்கு முன்பு நகரின் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அவர் பேசியிருந்தார்.