சூட்கேஸில் இருந்து வந்த சத்தம்.. விடுதிக்குள் ரகசியமாக வந்த பெண்.. வசமாகி சிக்கிய மாணவன்
சூட்கேஸில் தனது காதலியை மறைத்து வைத்து விடுதிக்குள் அழைத்து வந்தபோது, விடுதியின் காவலர்கள், அதை சோதனை செய்துள்ளனர். அப்போது, சூட்கேஸில் இருந்த பெண்ணை பார்த்து விடுதி காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேஸை விடுதியின் காவலர்கள் சோதனை செய்வதும் அதிலிருந்து பெண் எழுந்து நிற்பதும் காணொளியாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கல்லூரி விடுதிக்குள் யாருக்கும் தெரியாமல் காதலியை அழைத்து வர முயற்சித்த மாணவன் வசமாக சிக்கியுள்ளார். சூட்கேஸில் பெண் ஒருவரை மறைத்து, விடுதிக்குள் அழைத்து வந்தபோது, விடுதியின் காவலர்கள், அதை சோதனை செய்துள்ளனர். அப்போது, சூட்கேஸில் இருந்த பெண்ணை பார்த்து விடுதி காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேஸை விடுதியின் காவலர்கள் சோதனை செய்வதும் அதிலிருந்து பெண் எழுந்து நிற்பதும் காணொளியாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூட்கேஸில் காதலி.. வசமாகி சிக்கிய மாணவன்
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழக விடுதிக்குள் தனது காதலியை மாணவர் ஒருவர், யாருக்கும் தெரியாமல் ரகசியாக அழைத்து செல்ல முயற்சித்துள்ளார். சூட்கேஸில் காதலியை மறைத்து வைத்து, விடுதி அறைக்குள் அழைத்து செல்ல முயற்சி செய்தபோது, வசமாக சிக்கியுள்ளார்.
விடுதியின் காவலர்கள், சூட்கேஸை சோதனை செய்துபோது அதிலிருந்து பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். இதை பார்த்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சூட்கேஸை காவலர்கள் சோதனை செய்வதும் அதிலிருந்து பெண் ஒருவர் வெளியே வரும் காட்சியை சக மாணவர் ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். அந்த காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விடுதி காவலர்கள், குறிப்பிட்ட அந்த சூட்கேஸை தடுத்து நிறுத்தியது எப்படி என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், சூட்கேஸை விடுதிக்குள் எடுத்துச் செல்லும்போது, சுவற்றில் பட்டு உள்ளே இருந்த பெண் கத்தியதாகவும் அலறியதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் அதே பல்கலைக்கழக மாணவியா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை.
"இது பெரிய விஷயமே இல்ல"
இதுகுறித்து பல்கலைக்கழகம் அளித்த விளக்கத்தில், "எங்கள் மாணவர்கள் குறும்புத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். எங்கள் பாதுகாப்பு இறுக்கமாக இருந்ததால், மாணவர் பிடிபட்டார். இது பெரிய விஷயமல்ல. எங்கள் பாதுகாப்பு எப்போதும் கடுமையாக இருக்கும். இந்த விஷயம் தொடர்பாக யாரும் எந்த புகாரும் பதிவு செய்யவில்லை" என தெரிவித்துள்ளது.
இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள், பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றன. கலாய்த்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரியில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்ததாக பயனர் ஒருவர் நினைவுபடுத்தினார். அப்போது, ஒரு மாணவர் தனது காதலியை சூட்கேஸில் வைத்து விடுதிக்குள் அழைத்து செல்ல முயற்சி செய்ததாகவும் ஆனால், இறுதியில் பிடிபட்டதாகவும் நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.





















