மேலும் அறிய

Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி - 3 பேர் கைது

Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்து தொடர்பாக, தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து:

வியாழக்கிழமை காலை ஹரியானாவின் நர்னாலில் ஒரு கிராமம் அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ஜிஎல் பப்ளிக் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து கனினாவின் உன்ஹானி கிராமம் அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்ததாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரம்ஜான் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டாலும், விதிகளை மீறி நேற்று பள்ளி இயங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான சுமார் 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற இந்த பேருந்து, நேற்று காலை 8.30 மணியளவில் விபத்தில் சிக்கியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த  பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது  மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிப் பைகள், காலணிகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் படிப்புப் பொருட்கள் விபத்து நடந்த இடத்தில் சிதறிக்கிடந்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

3 பேர் கைது:

விபத்து நடந்த வழியாக சென்ற பொதுமக்கள் தான், காயமடைந்த சுமார் 20 மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டுனர் மதுபோதையில் இருந்தாரா என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்தை அதிவேகமாக செலுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, விடுமுறை தினத்திலும் பள்ளி ஏன் திறக்கப்பட்டது என்பதை விளக்குமாறு தனியார் பள்ளிக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் சீமா த்ரிகா தெரிவித்துள்ளார். வாகனத்தின் தகுதிச் சான்றிதழ் நீண்ட காலத்திற்கு முன்பே காலாவதியாகிவிட்டதாகவும், அதில் காப்பீடு மற்றும் பிற ஆவணங்கள் இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

தலைவர்கள் இரங்கல்:

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "கனினா, மகேந்திரகரில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது வருத்தம் அளிக்கிறது. அப்பாவி குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்களுக்கு உதவ உள்ளூர் நிர்வாகம் தயாராக உள்ளது. நான் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள். இந்த இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். உள்ளூர் நிர்வாகம் காயமடைந்த குழந்தைகளுக்கு உதவி செய்கிறது. அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget